Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏ ஆர் ரஹ்மான் மருத்துவமனையில் அனுமதி! - போன் செய்து விசாரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!

Prasanth Karthick
ஞாயிறு, 16 மார்ச் 2025 (11:08 IST)

பிரபல இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் போன் செய்து நலம் விசாரித்துள்ளார்.

 

இந்திய சினிமாவின் உலகளாவிய இசை அடையாளமாக விளங்குபவர் ஏ.ஆர்.ரஹ்மான். ஆஸ்கர் உள்ளிட்ட பல உலகளாவிய விருதுகளையும் அங்கீகாரத்தையும் பெற்றுள்ள ஏ ஆர் ரஹ்மான், இன்று திடீர் உடல்நலக் குறைவால் சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், ரஹ்மானின் உடல்நிலை குறித்து அவரது மருத்துவர்களிடம் போன் செய்து நலம் விசாரித்துள்ளார்.

 

இதுகுறித்து கூறிய அவர் “உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மானின் உடல்நலம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தேன். அவர் நலமாக உள்ளதாகவும், விரைவில் வீடு திரும்புவார் என்றும் தெரிவித்தனர். மகிழ்ச்சி” என்று கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போரை நிறுத்தினால் மட்டுமே பணயக் கைதிகள் விடுதலை! - ஹமாஸ் உறுதி!

ஆட்டோ மீட்டர் கட்டண உயர்வு கோரிக்கை: ஆட்டோ டிரைவர்கள் 19ம் தேதி வேலைநிறுத்த போராட்டம்!

சென்னை மக்களே..! நாளை 21 மின்சார ரயில்கள் ரத்து! - தெற்கு ரயில்வே அறிவிப்பு!

ஏற்கனவே ஒரே நாடு, ஒரே தேர்தல் இந்தியாவில் நடந்துள்ளது! - மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மெக்வால்!

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதன்மை தேர்வு.. முக்கிய அறிவிப்பு வெளியீடு..

அடுத்த கட்டுரையில்
Show comments