Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன் ஜென்மம் குறித்து பேச்சு: மகாவிஷ்ணு மீது மாற்றுத்திறனாளிகள் காவல்துறையில் புகார்!

Mahendran
வெள்ளி, 6 செப்டம்பர் 2024 (14:37 IST)
மகாவிஷ்ணு முன் ஜென்மம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகவும் அவரது பேச்சை எங்களது மனம் புண்படுத்தியதாகவும் மாற்றுத்திறனாளிகள் சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
சென்னை அசோக் நகர் பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர் ஆன்மீகம் பேசியபோது முன் ஜென்ம பாவ புண்ணியத்தால் தான் மாற்றுத்திறனாளியாக பிறக்கிறார்கள் என பேசியதாக தெரிகிறது.
 
அவருடைய இந்த பேச்சு எங்களுக்கு எதிரான வன்செயலாக கருதுகிறோம் என்று மகாவிஷ்ணு மீது மாற்றுதிறனாளிகள் புகார் அளித்துள்ளனர். சர்ச்சைக்குரிய வகையில் பள்ளியில் பேசிய மகாவிஷ்ணுவை வன்கொடுமை சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்றும் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
 
இந்த மனு மீது எந்த வகையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Farewell மேடையில் பேசும்போது மாரடைப்பு! 20 வயது பெண் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

அந்த தியாகி யார்? உங்களால் ஏமாற்றப்பட்ட ஓபிஎஸ்ஸும், தினகரனும்தான்! - எடப்பாடியாருக்கு அமைச்சர் பதில்!

அதிபர் டிரம்புக்கு எதிராக வெடித்தது மக்கள் போராட்டம்.. பதவி விலக வலியுறுத்தி முழக்கம்..!

சிலிண்டர் விலை உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும்: செல்வப்பெருந்தகை..!

திடீர் திருப்பம்.. வக்பு வாரிய திருத்த மசோதாவை முதல் ஆளாக ஏற்று கொண்ட கேரளா..!

அடுத்த கட்டுரையில்
Show comments