Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆளுனர் ரவி புகார் எதிரொலி: தமிழக தலைமை செயலாளர் இறையன்புவுக்கு நோட்டீஸ்..!

Webdunia
வெள்ளி, 5 மே 2023 (09:19 IST)
தமிழக ஆளுநர் ரவியின் புகார் காரணமாக தமிழக தலைமைச் செயலாளர் இறையன்புவுக்கு தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
சமீபத்தில் ஆளுநர் ரவி ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த போது சிதம்பரம் தீட்சிதர்களின் பெண் குழந்தைகள் துன்புறுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு கூறியது குறித்து கூறிய அவர் ’அது பொய் வழக்கு’ என்று தெரிவித்தார். 
 
சிதம்பரம் தீட்சிதர்கள் குழந்தை திருமணம் செய்வதாக பொய் வழக்கு போடப்பட்டது என்றும் இந்த வழக்கில் 6, 7ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு கன்னித்தன்மை சோதனை நடத்தப்பட்டதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டு செய்து தெரிவித்தார்
 
நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட கன்னித்தன்மை சோதனை செய்வது குழந்தைகள் உரிமை மீறல் என்றும் அவர் புகார் அளித்தார். இதனை அடுத்து தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் தமிழக தலைமைச் செயலாளர் இறையன்புவுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது 
 
சிதம்பரம் பெண் குழந்தைகள் துன்புறுத்தப்பட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் விவரங்களை தெரிவிக்குமாறு அந்த நோட்டீஸில் கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எல்லோர்க்கும் எல்லாம் என்ற உயரிய நோக்கில் தமிழ்நாடு பட்ஜெட்: முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

டிஎன்பிஎஸ்சி காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 10,000 தான். எப்படி 40,000 நிரப்ப முடியும்? ஈபிஎஸ் கேள்வி

ஜவாஹிருல்லாவிற்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு..!

தி.மு.க. அரசு கடன் வாங்குவதில் சளைத்தது அல்ல: பட்ஜெட் குறித்து ஈபிஎஸ் விமர்சனம்..!

இலவசங்கள் எப்போதும் வறுமையை நீக்காது: இன்போசிஸ் நாராயண மூர்த்தி

அடுத்த கட்டுரையில்