Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போலீசை மிரட்டிய போலி சமூக ஆர்வலருக்கு திடீரென போடப்பட்ட மாவுக்கட்டு!

Webdunia
வெள்ளி, 29 மே 2020 (08:32 IST)
போலி சமூக ஆர்வலருக்கு திடீரென போடப்பட்ட மாவுக்கட்டு
சென்னை அம்பத்தூரை சேர்ந்த போலி சமூக ஆர்வலர் ஒருவர் போலீசாரை மிரட்டிய நிலையில் திடீரென அவருக்கு மறுநாள் மாவு கட்டு போட்டு இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
சென்னை அம்பத்தூரை சேர்ந்த தேவேந்திரன் என்பவர் மது விற்பதாக தகவல் கிடைக்க நிலையில், போலீசார் அவரை சோதனை செய்தனர். ஆனால் அவரிடம் மது எதுவும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் அவர் தன்னை போலீசார் சோதனை செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தனது செல்போன் மூலம் ஒரு ஆடியோவை உருவாக்கி அதில் போலீசாருக்கு சவால் விட்டார். மேலும் போலீசார் தன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் ஆவேசமாக பேசி இருந்தார். இந்த ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதை அடுத்து இந்த ஆடியோவை கேட்ட போலீசார் மீண்டும் தேவேந்திரனை தேடியபோது அவர் மது விற்பனை செய்து கொண்டே இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது 
 
ஆனால் போலீசாரை கண்டதும் அவர் தப்பி ஓட முயற்சி செய்ததாகவும், அப்போது அவர் கீழே விழுந்து வலது கையில் காயம் ஏற்பட்டதாகவும், இதனால் அவருக்கு கை  எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும், அவருக்கு மாவுகட்டு போடப்பட்டிருந்ததாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது
 
போலீசாருக்கு சவால் விட்டு ஆடியோ அனுப்பிய போலி சமூக ஆர்வலர் கைது செய்யப்பட்டிருப்பதும் அவருக்கு மாவுக்கட்டு போடப்பட்டிருப்பதும் அந்த சென்னை அம்பத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments