இந்தா வந்துட்டாப்ல! வங்க கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி? - வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்!

Prasanth K
வியாழன், 16 அக்டோபர் 2025 (15:13 IST)

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்த நிலையில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

 

இந்தியாவின் அரபிக்கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள மாநிலங்கள், வட மாநிலங்கள் முழுவதும் பெய்து வந்த தென்மேற்கு பருவமழை முடிவடைந்துள்ளது. அடுத்த வங்கக்கடலில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்னரே கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது.

 

இந்நிலையில் தென் இந்திய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளது. இதனால் அடுத்த 5 நாட்களுக்கும் நல்ல மழை பெய்யும் என வானிலை அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

 

வடகிழக்கு பருவமழை தொடங்கியதுமே காற்றழுத்த தாழ்வுப் பகுதியும் உருவாக உள்ளது. வானிலை ஆய்வு மைய அறிவிப்பின்படி, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வரும் 24ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. இந்த புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு - வடமேற்கு திசையில் மெல்ல நகர்ந்து தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளை நெருங்கி வலுவடையக் கூடும் எனக் கூறப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் போட்டாவ வச்சி என் பொண்ணு வாழ்க்கையே போச்சி!.. அட பாவமே!...

இட்லி, வடை, தோசை சாப்பிடுவது போன்ற ஒரு சாதாரண சந்திப்பு.. விஜய் சந்திப்பு குறித்து பிரவீன் சக்கரவர்த்தி

உபியில் 2.45 கோடி வாக்காளர் படிவங்கள் திரும்ப வரவில்லை.. SIRஆல் பாஜகவுக்கு சிக்கலா?

ஸ்விக்கி, ஸொமட்டோ டெலிவரி ஊழியர்கள் லிஃப்டை பயன்படுத்த கூடாது.. போர்டு வைத்து சிக்கலில் சிக்கிய ஓட்டல்..!

வெங்காயம் - பூண்டு சண்டையால் விவாகரத்து! 23 வருட திருமண உறவுக்கு முடிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments