கர்ப்பிணி காதலியின் சடலத்தை சாக்கு மூட்டையில் கட்டி, கிணற்றில் வீசிய காதலன்

Webdunia
சனி, 1 ஏப்ரல் 2023 (13:44 IST)
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் காதலியின் சடலத்தை சாக்கு மூட்டையில் கட்டி, காதலன் கிணற்றில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் உள்ள ஒருதனியார் கல்லூரியில் 2 ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி ஸ்வேதா, அதேகல்லூரியில் 3 ஆம் ஆண்டு படித்து வந்த லோகேஷ் என்பவரைக் காதலித்து வந்துள்ளார்.

இருவருக்குமிடையே நெருக்கம் அதிகமான நிலையில், ஸ்வேதா கர்ப்பமாகியுள்ளார். அப்போது, லோகேஷ் ஸ்வேதாவை கைவிட்டு, வேறொரு பெண்ணுடன் தொடர்பு கொண்டுள்ளார்.

இதுபற்றி ஸ்வேதா, அவரிடம் நியாயம் கேட்கச் சென்றபோது அவருக்கு உணவு வாங்க லோகேஷ் வெளியே சென்றார். அந்த நேரத்தில் ஸ்வேதா தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

இதைப்பார்த்து, அதிர்ச்சியடைந்த லோகேஷ், ஸ்வேதாவின் சடலத்தை மூட்டைகட்டி அங்குள்ள விவசாய கிணற்றில் வீசியுள்ளார்.

இதுகுறித்து, பெற்றோர் போலீஸில் புகாரளித்த நிலையில், வழக்குப் பதிவு செய்து விசாரித்தபோது, இதுபற்றி அறிந்து போலீஸார் அதிர்ச்சியடைந்தனர்.

தற்போது லோகேசை கைது செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

cyclone ditwah: டிட்வா புயல் தாக்கம்!.. சென்னையில் கனமழை!.. 47 விமானங்கள் ரத்து!..

இலங்கையை புரட்டிப்போட்ட டிட்வா புயல்!.. பலி எண்ணிக்கை 132ஆக உயர்வு!....

கல்லூரி மாணவி கழுத்தை பிளேடால் அறுத்த காதலன்.. காதலி சாகவில்லை.. ஆனால் காதலன் தற்கொலை!

என் உயிரை மட்டும்தான் நீ பறிக்கவில்லை!.. மேடையில் கண்கலங்கிய படி பேசிய ராமதாஸ்!...

'டிட்வா' புயலின் நகர்வு.. அடுத்த 3 மணி நேரத்திற்கு தமிழ்நாட்டில் மழை எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments