Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சரக்கு குடுக்கலனா இறங்க மாட்டேன்! ரயில் பாலம் மேல் வடமாநில தொழிலாளி அலப்பறை!

Webdunia
புதன், 30 நவம்பர் 2022 (13:03 IST)
சென்னை திருவொற்றியூர் ரயில் நிலையத்தில் மது கேட்டு வடமாநில தொழிலாளி காவலர்களிடம் அலப்பறை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திருவொற்றியூர் ரயில் நிலையத்தில் காலை வழக்கம்போல பலரும் அன்றாட வேலைகளுக்காக ரயில் ஏற சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது வடமாநில தொழிலாளி ஒருவர் ரயில் நடைபாலத்தில் ஏறி அதன் பக்கவாட்டு கம்பி க்ரில்லை தாண்டி சென்று கீழே விழுவது போல ஒரு இரும்பு ராடில் அமர்ந்து கொண்டார்.

இதை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் ரயில்வே போலீஸாரிடம் தெரிவித்துள்ளனர். அங்கு விரைந்த ரயில்வே போலீஸார் அந்த தொழிலாளியை சமரசம் செய்து மீட்க முயன்றனர். ஆனால் தனக்கு மதுபானம் வாங்கி தந்தால்தான் வருவேன் என அவர் அடம்பிடித்துள்ளார்.

இதனால் ஒரு மதுபாட்டிலை வாங்கி வந்து காட்டி அவரை சமாதானம் செய்து பத்திரமாக மீட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edit By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி

ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

பால் உற்பத்தியில் சாதனை என கூறுவது மிகப்பெரிய மோசடி: பால் முகவர்கள் சங்கம்

வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்.. மிக கனமழைக்கு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments