Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கணவருடன் தகராறு ஏற்பட்டதால் தூக்கு போட்டுக்கொண்ட பெண்.. சாவில் மர்மம் உள்ளதா?

Webdunia
ஞாயிறு, 21 ஜூலை 2019 (17:22 IST)
திருவாரூரில் கணவருடன் ஏற்பட்ட தகராறில், பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் இளவாங்கார்குடியைச் சேர்ந்த பிரியா என்பவருக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு தேவேந்திரன் என்பவருடன் திருமணம் நடந்தது. தேவேந்திரன் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தேவேந்திரன், சொந்த ஊருக்கு வந்து மனைவியுடன் தங்கியிருந்தார். அப்போது அவரை இங்கேயே வேலை பார்க்கும்படி பிரியா வற்புறுத்தியுள்ளார். ஆனால் தேவேந்திரன் மறுத்துள்ளார். இதற்கு பிரியா கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். ஆனாலும் பிரியாவின் பேச்சை கேட்காமல் தேவேந்திரன் வெளிநாடு செல்ல ஆர்வம் காட்டி வந்துள்ளார். இதனால் மன வேதனை அடைந்த பிரியா, வீட்டில் தனியாக இருந்தபோது தூக்குப் போட்டுக் கொண்டார்.

இது பற்றி தகவலறிந்த திருவாருர் போலீஸார், பிரியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இது தொடர்பாக பிரியாவின் தந்தை கண்ணையன், தனது மகளின் சாவில் மர்மம் உள்ளதாக புகார் கொடுத்துள்ளார். இது தொடர்பாக போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரம்மோஸ் ஏவுகணை வாங்க போட்டி போடும் உலக நாடுகள்.. சீனா அதிர்ச்சி.

இந்திய வணிகர்களின் அதிரடி முடிவு.. துருக்கியின் ரூ.1500 கோடி வணிகம் போச்சா?

நேற்று 2 முறை சரிந்த தங்கம்.. இன்று 2 முறை உயர்ந்தது.. இப்போதைய விலை நிலவரம்..!

நாங்கள் போரில் தோல்வி அடைந்தது உண்மைதான்: பாகிஸ்தான் பத்திரிகையாளர் தகவல்..!

தீவிரவாதியின் இறுதிச்சடங்கில் பங்கேற்றோமா? பாகிஸ்தான் ராணுவம் விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments