Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொதுமக்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் இல்லாத ஒரு மோசமான சூழ்நிலை தமிழ்நாட்டில் நிலவுகிறது- ஓபிஎஸ் டுவீட்

Webdunia
ஞாயிறு, 6 ஆகஸ்ட் 2023 (15:49 IST)
சென்னை பெருங்களத்தூர் இரயில் நிலையத்தில் இன்று திருமதி தமிழ்ச்செல்வி என்பவர் மர்ம நபர்களால் கத்தியால் குத்தப்பட்டு படுகாயமடைந்துள்ள நிலையில் தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீரழிந்து கொண்டே செல்கிறது என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை என்று முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

‘’சென்னை, சைதாப்பேட்டை இரயில் நிலையத்தில் ஒரு பெண்மணி சரமாரியாக வெட்டப்பட்டு உயிரிழந்து இரண்டு வாரங்களே ஆகியுள்ள நிலையில், சென்னை பெருங்களத்தூர் இரயில் நிலையத்தில் இன்று திருமதி தமிழ்ச்செல்வி என்பவர் மர்ம நபர்களால் கத்தியால் குத்தப்பட்டு படுகாயமடைந்துள்ளார் என்ற செய்தி பேரதிர்ச்சியை அளிக்கிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திருமதி தமிழ்ச்செல்வி அவர்கள் விரைந்து பூரண குணமடைய எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீரழிந்து கொண்டே செல்கிறது என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை. பொதுமக்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் இல்லாத ஒரு மோசமான சூழ்நிலை தமிழ்நாட்டில் நிலவுகிறது. மாண்புமிகு முதல்வர் அவர்கள் I.N.D.I.A-விற்கு நேரம் ஒதுக்குவதை நிறுத்திவிட்டு, தமிழ்நாட்டில் நிலவும் சட்டம்-ஒழுங்கு சீரழிவை சரிசெய்ய நேரம் ஒதுக்குவது பயனுள்ளதாக இருக்கும்’’ என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

ஹாலிவுட்டை எரித்த காட்டுத்தீ! வீடுகளை இழந்து தவிக்கும் ஹாலிவுட் பிரபலங்கள்!

சந்திரபாபு நாயுடு மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.. திருப்பதி சம்பவம் குறித்து ரோஜா..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டியில்லையா? திமுக vs நாதக?

அடுத்த கட்டுரையில்
Show comments