Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெருங்களத்தூர் அருகே ஜாலியாக சாலையைக் கடக்கும் முதலை… பொதுமக்கள் அதிர்ச்சி!

Webdunia
திங்கள், 4 டிசம்பர் 2023 (08:18 IST)
வங்க கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயலால் நேற்றிரவு முதல் சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இன்று சென்னைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு பள்ளி கல்லூரிகள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நள்ளிரவு முதல் பெருமழை பெய்து வருவதால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மழை இன்று மாலைவரை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பெருங்களத்தூர்- நெடுங்குன்றம் சாலையில் உள்ள வேலம்மாள் பள்ளிக்கு அருகே சாலையில் முதலை ஒன்று நடந்து செல்லும் வீடியோ வெளியாகி பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

அந்த பகுதியில் குடியிருப்புப் பகுதிகள் உள்ளதால் பொதுமக்கள் இதனால் பீதியடைந்துள்ளனர். 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை வெயில் அதிகமாக இருக்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம்

அவுரங்கசீப்பின் கல்லறை சர்ச்சை தேவையற்றது: ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் கருத்து..!

ஈபிஎஸ் , செங்கோட்டையனை அடுத்து பிரதமர் மோடியை சந்திக்கும் ஓபிஎஸ்.. என்ன காரணம்?

வாரத்தின் முதல் வர்த்தக நாளில் சரிந்தது பங்குச்சந்தை.. இன்றைய நிஃப்டி நிலவரம்..!

6 ரூபாய் மதிப்புள்ள Vodafone பங்கை 10 ரூபாய்க்கு வாங்கிய அரசு! 11 ஆயிரம் கோடி நஷ்டம்!?

அடுத்த கட்டுரையில்
Show comments