Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய்யின் தவெக மாநாட்டுக்கு தடை விதிக்க வேண்டும்: காவல்துறையில் சமூக ஆர்வலர் மனு..!

Siva
வியாழன், 29 ஆகஸ்ட் 2024 (17:05 IST)
விஜய்யின் தமிழக வெற்றி கழகம் கட்சியின் முதல் மாநாடு விழுப்புரம் அருகே நடைபெற இருக்கும் நிலையில் இந்த மாநாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் காவல்துறையில் மனு அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் இந்த கட்சியின் முதல் மாநாடு செப்டம்பர் 23ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே நடைபெற இருப்பதாகவும் இந்த மாநாட்டுக்கு அனுமதி கோரி கட்சியின் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

மேலும் மாநாடு நடக்கும் இடத்தை காவல்துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமூக ஆர்வலர் செல்வம் என்பவர் விஜய் கட்சியின் மாநாட்டிற்கு தடை விதிக்க வேண்டும் என்று காவல்துறையில் மனு அளித்துள்ளார்.

நிற பேதத்தை ஊக்குவிக்கும் வகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி மற்றும் பாடல் இருப்பதாகவும் எனவே விஜய் மற்றும் புஸ்ஸி ஆனந்த் மீது எஸ்சிஎஸ்சி வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழக வெற்றி கழகத்தின் மாநாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் இந்த கட்சியின் கொடியில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சியின் யானையை தாக்குவது போல அறிமுகம் செய்த பாடல் பாடல் ஆசிரியர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் சமூக ஆர்வலர் செல்வம் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு குறித்து காவல்துறை என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓடும் ரயிலில் இருந்து வீசப்பட்ட தண்ணீர் பாட்டில் தாக்கி சிறுவன் பலி.. அதிர்ச்சி சம்பவம்..!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு.. 2 காசு குறைந்து வர்த்தகம் முடிவு!

டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டணத்தை யூபிஐ மூலம் செலுத்தலாம்.. புதிய வசதி அமல்..!

மியான்மர் நிலநடுக்கம்.. 5 நாட்களுக்கு பின் ஒருவர் உயிருடன் மீட்பு..

வக்பு நிலங்களில் பள்ளிகள் கட்ட வேண்டும்: பிரதமருக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய இந்து மத துறவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments