Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுரை பேருந்து நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: மர்ம தொலைபேசியால் பரபரப்பு

Webdunia
செவ்வாய், 14 ஜனவரி 2020 (09:47 IST)
சமீபத்தில் களியக்காவிளையில் எஸ்ஐ வில்சன் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்ட நிலையில் இந்த கொலையை தீவிரவாதிகள் செய்து இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தீவிரவாதிகள் தற்போது வேட்டையாடப்பட்டு வருகின்றனர். இந்த வேட்டையில் ஒரு சிலர் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் இன்னும் சிலரை போலீசார் தேடி வருவதாகவும் கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் தீவிரவாதிகளின் வேட்டை ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் திடீரென இன்று காலை சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு மர்ம தொலைபேசி வந்தது. அதில் மதுரை பேருந்து நிலையங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனை அடுத்து சென்னை காவல் கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில் மதுரை போலீசார் தற்போது பேருந்து நிலையங்கள் உள்பட முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகின்றனர். குறிப்பாக மதுரை மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம் உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் போலீசார் தீவிர சோதனை செய்து வருகின்றனர்.
 
அதுமட்டுமன்று மதுரையில் உள்ள முக்கிய இடங்களில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசாரும் களத்தில் இறங்கி சோதனை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை எந்த ஒரு வெடிகுண்டும் சிக்கவில்லை என்பதால் இது வெறும் மிரட்டலாக இருக்கும் என்று கருதப்பட்டாலும் இன்னும் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுரை திருமலை நாயக்கர் மகால் தூணை தொட்டால் அபராதம்.. அதிரடி அறிவிப்பு..!

ராஜ்யசபா தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு பாஜக ஆதரவு.. உறுதியாகிறது கூட்டணி..!

இன்று தவெக பொதுக்குழு.. சரியாக 9 மணிக்கு வருகை தந்த விஜய்..!

வருங்கால முதலமைச்சர் புஸ்ஸி ஆனந்த்.. அப்ப விஜய் நிலைமை? - தவெகவினர் போஸ்டரால் பரபரப்பு!

இன்று முதல் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு.. 4858 பறக்கும் படைகள் தயார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments