Webdunia - Bharat's app for daily news and videos

Install App

6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கல்லால் அடித்துக் கொன்ற கொடூரன்

Webdunia
வெள்ளி, 15 டிசம்பர் 2017 (09:45 IST)
திண்டுக்கல் அருகே 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த்தோடு, அந்தச் சிறுமியை கல்லாலே அடித்துக் கொன்ற மனசாட்சி இல்லாத கொடூரனை போலீஸார் கைது செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் செம்மினபட்டியை சேர்ந்தவர் சிவகாமி. இவரது  6 வயது மகள் முத்துலட்சுமி விடுமுறையில் அவரது பாட்டி வீட்டிற்கு சென்றிருந்தார். முத்துலட்சுமியின் பாட்டியால் சிறுமியை செம்மினபட்டிக்கு கொண்டு சென்று விட முடியாததால் குப்பம்பட்டியை சேர்ந்த ராஜ்குமார் என்பவருடன் சிறுமி முத்துலட்சுமியை அவரது வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.
 
ஆனால் அந்த கொடூரன் சிறுமியை வீட்டிற்கு கொண்டு சேர்க்காமல், சுக்காவழி என்ற இடத்தில் வைத்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். அத்தோடு இல்லாமல் சிறுமியை கல்லால் அடித்து கொலை செய்துள்ளான். பின்னர் சிறுமி காதில் அணிந்திருந்த நகைகள், காலில் இருந்த கொலுசு ஆகியவற்றை திருடிக்கொண்டு தப்ப முயன்றான். அதற்குள் பொதுமக்கள், அவனை பிடித்து வடமதுரை போலீஸாரிடம் ஒப்படைத்தனர். போலீஸார் அவனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
 
சென்னையில் சிறுமி ஹாசினியை தஷ்வந்த் என்ற கொடூரன் பலாத்கரம் செய்து எரித்துக் கொலை செய்ததைப் போல், மற்றொரு சம்பவம் நடந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை தடுப்பதற்கு ஒரே வழி, அரபு நாடுகளில் பாலியல் குற்றவாளிகளுக்கு கொடுக்கப்படும் தண்டணையை இந்த கொடூர வேலையை செய்த குற்றவாளிகளுக்கு கொடுத்தால் தான் அடுத்த முறை இது போல அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

ஹாலிவுட்டை எரித்த காட்டுத்தீ! வீடுகளை இழந்து தவிக்கும் ஹாலிவுட் பிரபலங்கள்!

சந்திரபாபு நாயுடு மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.. திருப்பதி சம்பவம் குறித்து ரோஜா..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டியில்லையா? திமுக vs நாதக?

அடுத்த கட்டுரையில்