Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் இன்றும் 500க்கும் மேல்: தமிழகத்தில் 798 பேர் பாதிப்பு

Webdunia
திங்கள், 11 மே 2020 (19:18 IST)
தமிழகத்தில் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவலை தினமும் சுகாதாரத்துறை தெரிவித்து வரும் நிலையில் சற்றுமுன் வெளியான தகவலின்படி இன்று தமிழகத்தில் 798 பேர்களுக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 8002ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
மேலும் இன்று கொரோனாவால் பாதிப்பு அடைந்த 798 பேர்களில் சென்னையில் மட்டும் 538 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் இதனையடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4371 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
மேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 6 பேர் பலியாகியுள்ளதை அடுத்து தமிழகத்தில் பலி எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது என்பதும், தமிழகத்தில் இன்று மட்டும் 11,584 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும் தமிழகத்தில் மொத்தம் 243,952 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாகவும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
 
மேலும் தமிழகத்தில் இன்று பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளனர். இதனையடுத்து கொரோனாவில் இருந்து தமிழகத்தில் மொத்தம் குணமாகியவர்களின் எண்ணிக்கை பேர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் மாவட்டவாரியாக கொரோனா பாதிப்பு குறித்த தகவலை இந்த அட்டவணையில் தெரிந்து கொள்ளலாம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிட்காயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் உயர்வு.. கிரிப்டோ சந்தையில் குவியும் முதலீடுகள்..!

இளம்பெண்களை பின்தொடர்ந்து வீடியோ எடுத்த வேலையில்லா பட்டதாரி.. போலீஸ் எடுத்த அதிரடி நடவடிக்கை..!

ஜெயலலிதா, எம்ஜிஆர் செய்ததும் சதியா? சங்கி மாதிரி பேசாதீங்க! - எடப்பாடியாருக்கு சேகர்பாபு பதில்!

முதல்வர் அறிவிப்புக்கு பின் மாரடைப்பு பயம் அதிகரிப்பு.. மருத்துவ பரிசோதனைக்கு குவியும் பொதுமக்கள்..!

உனக்கு அறிவிருக்கா? கேமராவ பிடுங்கி எறியுறேன்: விருதுநகர் கூட்டத்தில் வைகோ கோபம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments