Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு?

Webdunia
வெள்ளி, 12 மார்ச் 2021 (19:37 IST)
தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை தெரிவித்து வரும் தமிழக சுகாதாரத்துறை இன்று தமிழகத்தில் 670 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 858,272 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
மேலும் இன்று கொரோனாவால் பாதிப்பு அடைந்த 670 பேர்களில் 265 பேர்கள் சென்னையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 4 பேர் பலியாகியுள்ளதை அடுத்து தமிழகத்தில் பலி எண்ணிக்கை 12,539 ஆக உயர்ந்துள்ளது என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. 
 
மேலும் தமிழகத்தில் இன்று 527 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளனர். இதனையடுத்து தமிழகத்தில் குணமானோர் எண்ணிக்கை 841,250 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று 64,933 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 178,33,904 என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

சாதி மறுப்பு திருமணத்தை தொடர்ந்து செய்வோம்: மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கே பாலகிருஷ்ணன்..!

எந்த தொகுதியில் ராஜினாமா..! ராகுல் காந்தி இன்று அறிவிப்பு.?

இந்திரா காந்தி இந்தியாவின் அன்னை.. எதிர்கட்சி என்பதால் தப்பா பேசக்கூடாது! – பாஜக அமைச்சர் சுரேஷ் கோபி!

மணல் கொள்ளையர்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.! தமிழக அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்..!

எச்சரிக்கைக்கு எந்த பயனும் இல்லை.. திருவொற்றியூரில் மாடு முட்டி பெண் உள்பட 2 பேர் படுகாயம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments