Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை..! கடன் பிரச்சினையால் விபரீத முடிவு.!!

Senthil Velan
வியாழன், 23 மே 2024 (16:18 IST)
சிவகாசி அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் பாலாஜி நகரைச் சேர்ந்தவர் லிங்கம். இவரது மனைவி பழனியம்மாள். இவர்களுக்கு ஆனந்தவள்ளி என்ற மகளும், ஆதித்யா என்ற மகனும் இருந்தனர். 
 
லிங்கம் ராஜபாளையம் அருகே தேவதானம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும், பழனியம்மாள் சிவகாசி அருகே சுக்கிவார்பட்டி பள்ளியில் ஆசிரியராகவும் பணிபுரிந்து வந்தனர். ஆனந்தவள்ளிக்கு திருமணமாகி சசிகா என்ற 3 மாத கைக்குழந்தை இருந்தது. ஆனந்தவள்ளியும் தனது தந்தை வீட்டில் வசித்து வந்தார்.
 
இந்நிலையில், வியாழக்கிழமை காலை வெகு நேரமாகியும் லிங்கத்தின் வீட்டுக் கதவு திறக்காததால், அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து அங்கு வந்த போலீஸார் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, லிங்கம், அவரது மனைவி பழனியம்மாள் அவர்களது மகன், மகள், பேத்தி என ஐந்து பேரும் இறந்த நிலையில் கிடந்தனர். உடனடியாக 5 பேரின் உடல்களையும் போலீசார் மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

ALSO READ: கனமழையால் தமிழகத்தில் 4,385 ஹெக்டேர் பயிர்கள் சேதம்.!
 
முதற்கட்ட விசாரணையில், கடன் பிரச்சினை காரணமாக லிங்கம் குடும்பத்தினர் விஷம் குடித்து தற்கொலை செய்திருக்கலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் தற்கொலைக்கான காரணம் முழுமையான விசாரணைக்கு பின்னர்தான் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிழக்கு ஆப்பிரிக்க நத்தை: ஆண்டுக்கு 500 முட்டைகள் இடும் இவை இந்தியாவில் ஊடுருவியது எப்படி? என்ன ஆபத்து?

வன்கொடுமைக்கு ஆளான மாணவிக்கு ரூ.25 லட்சம் இடைக்கால நிவாரணம்! - நீதிமன்றம் உத்தரவு!

பாமகவில் வெடித்த மோதல்? மேடையிலேயே ராமதாஸ் - அன்புமணி வாக்குவாதம்! - என்ன நடந்தது?

இன்றைக்கும்.. என்றைக்கும்.. நீ எங்கள் நெஞ்சத்தில்..! - கேப்டன் விஜயகாந்திற்கு மு.க.ஸ்டாலின், கமல், ரஜினி நினைவஞ்சலி!

மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலம் தொடக்கம்! - பின் தொடரும் காங்கிரஸ் பிரமுகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments