Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கனமழை எதிரொலி: 5 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

Webdunia
சனி, 30 நவம்பர் 2019 (07:53 IST)
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் நவம்பர் 30 முதல் டிசம்பர் 2 வரை 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் அறிவித்திருந்தது என்பது தெரிந்ததே 
 
அதேபோல் இன்று அதிகாலை முதல் சென்னையின் முக்கிய பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக தேனாம்பேட்டை, அண்ணாசாலை, எழும்பூர், நுங்கம்பாக்கம், கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், மயிலாப்பூர், வேளச்சேரி, கேகே நகர், பெரும்பாக்கம் ஆகிய பகுதிகளில் தற்போது கனமழை பெய்து வருவதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது
 
இந்த நிலையில் சென்னை, செங்கல்பட்டு, சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை, நாகை  ஆகிய  5 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை என அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் சற்றுமுன் அறிவித்துள்ளனர். மற்ற மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் விடுமுறை குறித்த அறிவிப்பு வெளிவருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
சென்னையில் அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments