Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சத்து மாத்திரை சாப்பிட்ட மாணவி உயிரிழந்த விவகாரம் : தலைமையாசிரியர் உட்பட 4 பேர் சஸ்பெண்ட்

Webdunia
வெள்ளி, 10 மார்ச் 2023 (16:30 IST)
அதிக சத்து மாத்திரைகளை சாப்பிட்டு நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் உயிரிழந்த விவகாரம் பெரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் தலைமை ஆசிரியர் உள்பட நான்கு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. 
 
கடந்த ஆறாம் தேதி நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை நகராட்சி உருது பள்ளியில் மாணவர்களுக்கு சத்து மாத்திரைகளை கொடுத்த நிலையில் போட்டி போட்டுக் கொண்டு சாக்லேட் சாப்பிடுவது போல மாணவர்கள் சத்து மாத்திரையை சாப்பிட்டார்கள். 
 
இதனை அடுத்து நான்கு மாணவர்கள் உடல்நிலை குறைவு ஏற்பட்ட நிலையில் பாத்திமா என்ற மாணவி உயிரிழந்தார். இதனை அடுத்து கவனக்குறைவாக செயல்பட்டதாக தலைமை ஆசிரியர், ஆசிரியர், சுகாதாரத் துறை அலுவலர் உட்பட நான்கு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார். 
 
ஏற்கனவே உயிரிழந்த மாணவியின் குடும்பத்திற்கு மூன்று லட்சம் ரூபாய், சிகிச்சை பெற்று வரும் மாணவர்களின் குடும்பத்திற்கு ஒரு லட்ச ரூபாய் நிதி வழங்க முதலமைச்சராக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 மாதங்களில் ரூ.10,000 கோடி வருமானம்.. ஜியோ ஹாட்ஸ்டாருக்கு கொட்டும் லாபம்..!

எங்கும், எப்போதும் அலட்சியம்.. விடியா திமுக அரசுக்கு எனது கண்டனம்.. ஈபிஎஸ்

நடுநிலை விசாரணைக்கு தயார்.. கடும் நெருக்கடியால் இறங்கி வந்த பாகிஸ்தான் அரசு.

சிந்து நதிநீரை நிறுத்தி எங்கே தேக்கி வைப்பீர்கள்? மத்திய அரசுக்கு ஒவைசி கேள்வி..!

அபிநந்தன் கழுத்தை அறுத்துவிடுவேன்: பாகிஸ்தான் கர்னல் செய்கையால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments