Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 3680, டிஸ்சார்ஜ் 4163: மீண்டு வருகிறதா தமிழகம்?

Webdunia
வெள்ளி, 10 ஜூலை 2020 (19:03 IST)
தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை தெரிவித்து வரும் தமிழக சுகாதாரத்துறை இன்று தமிழகத்தில் 3680 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 130,261  ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
மேலும் இன்று கொரோனாவால் பாதிப்பு அடைந்த 3680 பேர்களில் 1205 பேர்கள் சென்னையை சேர்ந்தவர்கள் என்பதும், இதனையடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 74,969 ஆக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. சென்னையில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு 2000ஐ குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
மேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 64 பேர் பலியாகியுள்ளதை அடுத்து தமிழகத்தில் பலி எண்ணிக்கை 1829 ஆக உயர்ந்துள்ளது என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று 4163  பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளதால் கொரோனாவில் இருந்து தமிழகத்தில் மொத்தம் குணமாகியவர்களின் எண்ணிக்கை 82,324 என உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
மேலும் தமிழகத்தில் இன்று 35921 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாகவும் 15,29,092 பேர்களுக்கு மொத்தம் பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாகவும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் ஆல் பாஸ் நடைமுறை தொடரும்: கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு..!

16 தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு: இலங்கை அதிபர் இந்திய வருகைக்கு பின் நடக்கும் சம்பவம்..!

சென்னையில் மெட்ரோ ரயில் சேவை தாமதம்! விமான நிலையம் செல்பவர்கள் அவதி..!

காலை 10 மணிக்குள் சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

மகாத்மா காந்தி பாகிஸ்தானுக்கு தான் தேசத் தந்தை: பிரபல பாடகர் சர்ச்சை கருத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments