Webdunia - Bharat's app for daily news and videos

Install App

30 நாள் பெண் குழந்தை உயிரோடு புதைப்பு: மீண்டும் பெண்சிசுக்கொலையா?

Webdunia
வெள்ளி, 6 மார்ச் 2020 (08:42 IST)
30 நாள் பெண் குழந்தை உயிரோடு புதைப்பு
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் உசிலம்பட்டி பகுதியில் பெண் குழந்தைகள் பிறந்தால் உயிரோடு புதைப்பது, கள்ளிப்பால் கொடுத்து கொலை செய்வதுமான செயல்கள் நடந்து வந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்ததன் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக இந்த பிரச்சனை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஆனால் திடீரென தற்போது மீண்டும் அந்த பகுதியில் பெண் சிசுக்கொலை ஆரம்பித்துள்ளதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உசிலம்பட்டி அருகே உள்ள புள்ளனேரி என்ற பகுதியைச் சேர்ந்த வைரமுருகன் -சௌமியா தம்பதியினருக்கு பிறந்த குழந்தை ஒன்று முப்பது நாளே ஆன நிலையில் திடீரென உயிரிழந்ததாகவும் அதனால் வீட்டு அருகே அதனை புதைத்து விட்டதாகவும் கூறி உள்ளனர் 
 
ஆனால் இது குறித்து சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கு புகார் அளித்தனர். காவல்துறையினர் விரைந்து வந்து குழந்தையின் பெற்றோர்களிடம் விசாரணை செய்து, குழந்தை புதைத்த இடத்தில் அந்த குழந்தையை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்தனர். அதில் அந்த குழந்தை உயிரோடு புதைக்கப்பட்டதாக தெரிய வந்தது. மேலும் இது குறித்த குழந்தையின் பெற்றோர்களிடம் விசாரனை செய்தபோதுஅந்த குழந்தை உயிரோடு புதைக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
 
இதனையடுத்து குழந்தையின் பெற்றோர் மற்றும் குழந்தையின் தாத்தா ஆகிய மூவர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர். முப்பது நாளே ஆன பச்சிளம் பெண் குழந்தை ஒன்று உயிரோடு புதைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மீண்டும் உசிலம்பட்டி பகுதியில் பெண் சிசுக்கொலை தலைதூக்கி விட்டதா என்ற அச்சமே அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments