Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காவேரி கூக்குரல் சார்பில் திருப்பூர் மாவட்டத்தில் 3 லட்சம் மரங்கள் நடத்திட்டம்! - செய்தித்துறை அமைச்சர் மாண்புமிகு வெள்ளகோவில் சுவாமிநாதன் அவர்கள் தொடங்கி வைத்தார்!

Tirupur

Prasanth Karthick

, சனி, 1 ஜூன் 2024 (20:01 IST)
ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் இந்தாண்டு திருப்பூர் ‌ மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்களில் 300000 மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டு உள்ளது.


 
 உலக  சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இன்று (01-06-2024) நடைபெற்ற இதன் தொடக்க விழாவில்  மாண்புமிகு  செய்தித்துறை அமைச்சர் வெள்ளகோயில் சாமிநாதன் அவர்கள் முதல் மரக்கன்றை நட்டு இந்நிகழ்வை தொடங்கி வைத்தார்.

தமிழ்நாட்டில் காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் இந்தாண்டு (24-25 நிதியாண்டில்) 1.21 கோடி மரங்கள் நட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாவட்டம் தோறும் இதன் தொடக்க விழாக்கள் தொடர்ந்து நடைப்பெற்று வருகின்றன.

அந்த வகையில் திருப்பூர் மாவட்டத்தில் செய்தி துறை அமைச்சர் மாண்புமிகு வெள்ளகோவில் சுவாமிநாதன் அவர்கள் விவசாயிகளுக்கு மரக் கன்றுகளை வழங்கியும் , முதல் மரக்கன்றை நட்டும் துவங்கி வைத்தார்..

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு இவ்வியக்கம் மூலம் விவசாய நிலங்களில் 250000 மரங்கள் நடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஈஷா 2002-ம் ஆண்டு முதல் சுற்றுச்சூழல் மேம்பாடு மற்றும் மரம் நடும் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.  காவேரி நதியை மீட்டெடுக்க காவேரி கூக்குரல் இயக்கம் 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

இவ்வியக்கம் தமிழகம் மற்றும் கர்நாடக மாநில காவேரி வடிநிலப் பகுதிகளில் பசுமை பரப்பை அதிகரிக்க விவசாய நிலங்களில் மரம் சார்ந்த விவசாயத்தை முன்னெடுக்கிறது. இதன் மூலம் மண்ணின் தரமும், அதன் நீர்பிடிப்பு திறனும் மேம்படுவதோடு, விவசாயிகளுக்கு பொருளாதார நலன்களும் கிடைக்கின்றது.

மேலும் இவ்வியக்கம் விவசாயிகள் மரம் நடுவதற்கும், தொடர்ந்த பராமரிப்பிற்கும் தேவையான தொழில்நுட்ப உதவிகளை இலவசமாக வழங்கி வருகிறது. மண்ணுக்கேற்ற மரங்கள் தேர்வு, நீர் மேலாண்மை, களை மேலாண்மை, ஊடுபயிர் சாகுபடி போன்ற ஆலோசனைகளை காவேரி கூக்குரல் பணியாளர்கள் விவசாய நிலங்களுக்கு சென்று வழங்கி வருகின்றனர். விவசாயிள் கூடுதல் தகவலுக்கும், மரக்கன்றுகள் தேவைக்கும் 80009 80009 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முக்கிய ஊடகங்களின் எக்ஸிட்போல் முடிவுகள்: 3வது முறையாக பிரதமராகிறார் மோடி..