Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் இருந்து பேருந்துகளில் 3,62,000 பேரும், ரயில்களில் 12 லட்சம் பேரும் பயணம்!

Webdunia
சனி, 11 நவம்பர் 2023 (16:02 IST)
தமிழகத்தில் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று தீபாவளி பண்டிகை. இப்பண்டிகைக்கு மக்கள் தங்கல் சொந்த ஊருக்குச் சென்று கொண்டாடுவர்.

அதன்படி அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த மக்களும் இந்த தீபாவளியை கொண்டாட அவரவர் சொந்த ஊருக்குச் சென்று வருகின்றனர். இதற்கான பேருந்து ஏற்பாடுகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

குறிப்பாக சென்னையில் இருந்து பயணிகள் வெளியூர் செல்ல  கூடுதல் பேருந்துகள் இயக்கியுள்ளது.

இதுகுறித்து போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் தன் வலைதள பக்கத்தில்,

‘’தீபாவளியை முன்னிட்டு கூடுதல் அரசு பேருந்துகள் இயக்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி  மு.க.ஸ்டாலின்  அவர்கள் உத்தரவிட்டதன்படி,

பூந்தமல்லி புறவழிச்சாலையில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து முனையத்தில் ஆய்வு மேற்கொண்டதில்,

கடந்த இரண்டு நாட்களில்,நேற்று இரவு 12 மணி வரை 3,62,000 பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

இன்று காலை 5 மணி வரை 65 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி அவர்களின் தலைமையிலான இந்த திராவிட மாடல் அரசில் மக்கள் சிரமமின்றி தங்களது சொந்த ஊர்களுக்கு பயணிக்கின்றனர்’’என்று தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசே தொடங்கிய ஓட்டுனர் பயிற்சி பள்ளி.. கார், பைக் ஓட்டும் பயிற்சிக்கு எவ்வளவு கட்டணம்?

அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும்.! ராகுலுக்கு பறந்த உத்தரவு..!!

இன்று இரவு 10 மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அப்பர் பெர்த் கழன்று விழுந்ததால் ரயில் பயணி பரிதாப பலி.. ரயில் பயணத்தில் பாதுகாப்பு இல்லையா?

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எத்தனை பேர் போட்டி: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

அடுத்த கட்டுரையில்
Show comments