Webdunia - Bharat's app for daily news and videos

Install App

28 மாணவிகள் கை, கால்கள் கட்டப்பட்டு பலாத்காரம்! - ஆந்திராவை அதிர்ச்சிக்குள்ளாக்கிய கேமராமேன்!

Prasanth Karthick
வியாழன், 19 செப்டம்பர் 2024 (10:47 IST)

ஆந்திராவில் பெண்கள் விடுதி நடத்தி வரும் கேமராமேன் ஒருவர் அங்குள்ள பள்ளி, கல்லூரி மாணவிகளை பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

நாடு முழுவதும் பல பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் நிலையில் ஆந்திராவிலும் அதிர்ச்சி தரக்கூடிய சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

 

ஆந்திராவின் ஏலூர் பகுதியில் தனியார் மாணவிகள் விடுதி ஒன்று செயல்பட்டு வந்துள்ளது. எர்ரகுண்ட பள்ளி பகுதியை சேர்ந்த சசிக்குமார் என்பவர் இந்த விடுதியை நிர்வகித்து வந்ததுடன், புகைப்படக்காரராகவும் இருந்து வந்துள்ளார். இந்த விடுதியின் வார்டனாக சசிக்குமாரின் இரண்டாவது மனைவியும், பாதுகாவலராக அவரது மருமகளும் செயல்பட்டு வந்துள்ளனர்.

 

அந்த பெண்கள் விடுதியில் பள்ளி சிறுமிகள் முதல் கல்லூரி பெண்கள் வரை 45 மாணவிகள் தங்கி படித்து வரும் நிலையில், அதில் இரண்டு மாணவிகள் சமீபத்தில் அப்பகுதியில் உள்ள காவல் நிலையம் ஒன்றில் சசிக்குமார் தங்களை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அதை வெளியில் சொல்லக்கூடாது என மிரட்டியதாகவும் புகார் அளித்துள்ளனர்.
 

ALSO READ: திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதா? முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிர்ச்சி தகவல்..!
 

அதை தொடர்ந்து போலீஸார் அந்த விடுதி பெண்களிடம் விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அங்குள்ள பல பெண்களை அழகாக போட்டோ எடுப்பதாக சொல்லி அழைத்து சென்ற சசிக்குமார் ஒரு வீட்டில் வைத்து கை, கால்களை கட்டிப்போட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

 

இதுகுறித்த போலீஸார் விசாரணையில் அங்குள்ள 28 பெண்கள் சசிக்குமாரால் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளதும், இதற்கு சசிக்குமாரின் இரண்டாவது மனைவி பனிஸ்ரீ உதவியதும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து சசிக்குமார், அவரது மனைவியை போலீஸார் கைது செய்து விசாரித்து வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெக கொடிகள், துண்டுகள்.. திருப்பூரில் குவியும் ஆர்டர்கள்..!

அமெரிக்க தேர்தலில் வெற்றி எதிரொலி: தெலுங்கு டிரம்ப் கோவிலில் சிறப்பு வழிபாடு..!

நான் கேட்காமலேயே வரதட்சணை கொடுத்தனர்.. மனைவி குடும்பத்தின் மீது மாப்பிள்ளை வழக்கு..!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

சென்னை ரிப்பன் மாளிகையை சுற்றி பார்க்க பொதுமக்களுக்கு அனுமதி: முழு விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்