Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முறைகேடாக மாற்ற முயன்ற ரூ.25 லட்சம் பணம் கொள்ளை - சென்னையில் பரபரப்பு

Webdunia
சனி, 19 நவம்பர் 2016 (11:34 IST)
ரூ.25 லட்சம் மதிப்பிலான  பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை, புதிய நோட்டுகளாக பெற எடுத்து செல்லபட்ட போது, மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
சென்னை, அடையாறு, சாஸ்திரி நகர், ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர் கிளையில், இளங்கோவன் என்பவர் கேஷியராக பணிபுரிந்து வருகிறார். இவர், நேற்று இரவு ரூ.25 லட்சம் பணத்துடன், ஒரு காரில் நங்கநல்லூரை நோக்கி சென்றுள்ளார்.
 
அப்போது, மீனம்பாக்கம் அருகே அவரது காரை 2 பேர் வழிமறித்தனர். அவர் காரை நிறுத்தியதும், கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்து பணத்தை பறித்துக் கொண்டு, அவர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பிவிட்டனர்.
 
இதனால் அதிர்ச்சியடைந்த இளங்கோவன், இதுபற்றி பல்லாவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இவ்வளவு பணம் யாருடையது என போலீசார் விசாரித்ததில், அப்பணம், கணக்கில் உள்ள பணம் இல்லை என்பதும், ஒரு பெரும்புள்ளியின் பணம் என்பதும் தெரிய வந்தது.
 
மேலும், நங்கநல்லூரை சேர்ந்த ஒரு வங்கி மேலாளர், அப்பணத்திற்கு பதிலாக புதிய நோட்டுகளை தர சம்மதித்ததாகவும், அங்கு சென்று கொண்டிருந்த போதுதான், வழிப்பறி நடந்ததாகவும் தெரிய வந்தது.
 
இதில் வி.ஐ.பி.ஒருவர் சம்பந்தப்பட்டிருப்பதாலும், அப்பணம் கருப்புப் பணம் என சந்தேகப்படுவதாலும், இதுபற்றிய தகவலை சம்பந்தப்பட்ட வங்கி மற்றும் போலீசார் வாய் திறக்க மறுப்பதாகவும் தெரிகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இறுதிச்சடங்கு செய்த மறுநாள் உயிரோடு வீட்டுக்கு வந்த நபர்.. குஜராத்தில் ஒரு அதிசய சம்பவம்..!

ஆன்லைன் வகுப்பு தான்.. 5ஆம் வகுப்பு வரை பள்ளிக்கு செல்ல வேண்டாம்: முதல்வர் உத்தரவு..!

பிரேசில் சென்றடைந்தார் பிரதமர் மோடி: ஜி20 மாநாட்டில் பங்கேற்பு..!

வங்கதேசம் - பாகிஸ்தான் இடையே நடந்த முதல் நேரடி பரிமாற்றம் - இந்தியாவுக்கு என்ன பிரச்னை?

நடிகை கஸ்தூரிக்கு நவம்பர் 29 வரை நீதிமன்ற காவல்: நீதிபதி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments