Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக மீனவர்கள் 24 பேர் கைது: இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்

Webdunia
செவ்வாய், 13 அக்டோபர் 2015 (23:27 IST)
தமிழக மீனவர்கள் 24 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவம் தமிழக மீனவர்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

 
ராமேஸ்வரத்தை சேர்ந்த 3000 க்கும் மேற்பட்ட மீனவர்கள் 600 படகுகளில் நேற்று இரவு கடலில் மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த, இலங்கை கடற்படையினர்,  மீனவர்களை துப்பாக்கியை காட்டி விரட்டியடித்தனர்.
 
மேலும், மீன்பிடிக்கும் வலைகளையும் அறுத்து சேதப்படுத்தினர். இதன் உச்சகட்டமாக  24 மீனவர்களை கைது செய்து இலங்கை கொண்டு சென்றனர்.

ஏற்கனவே, கடந்த 10 ஆம் தேதி அன்று நாகப்பட்டினத்தை சேர்ந்த 19 மீனவர்களை  இலங்கை கடற்படை சிறை பிடித்தனர். மேலும், இம்மாதம் 2ஆம் தேதி 7 மீனவர்களை கைது செய்தனர். இந்த நிலையில், 24 மீனவர்களை கைது செய்து இலங்கை கொண்டு சென்றனர். இந்த சம்பவம் ராமேஸ்வரம் மீனவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. 

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

Show comments