சிறுவனை பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை!

Webdunia
செவ்வாய், 10 அக்டோபர் 2023 (20:45 IST)
கரூரில் 8 - வயது சிறுவனை வன்புணர்ச்சியில் ஈடுபடுத்திய  வழக்கில், குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும் ரூ. 3 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு அளித்துள்ள கரூர் மகளிர் விரைவு நீதிமன்றம் நீதிபதி நசீமாபானு, பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு தமிழக அரசு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
 
கரூர் மாவட்டம் மலைக்கோவிலூர் பகுதியில் வசித்து வரும் கட்டடத் தொழில் முருகேசன். இவருக்கு திருமணம் ஆகவில்லை.  இந்த நிலையில், பக்கத்து வீட்டில் வசித்து வந்த 8 வயது சிறுவனிடம் செல்போனில் விளையாட்டு மொம்மை படம் காட்டி தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று வன்புணர்ச்சியில் ஈடுபட்டுள்ளார்.
 
இது தொடர்பாக கடந்த 20- 03- 22- ஆம் தேதி முருகேசன் கைது செய்யப்பட்டார்.   கரூர் மகளிர் விரைவு நீதிமன்றம் நீதிபதி நசீமாபானு இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கினார்.
 
குற்றவாளி முருகேசனுக்கு  20 ஆண்டுகள் சிறை  தண்டனை விதித்தும் ரூ. 3000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளார்.
 
மேலும்,  பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு தமிழக அரசு ரூ. 3 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டு உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

100% சொத்து வரி உயர்வு.. ஆர்ப்பாட்டம் தேதியை அறிவித்த அதிமுக..!

நீதிபதி சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: 150 எம்பிக்கள் கையெழுத்திட்ட தீர்மானம்..

பெயின்டிலிருந்து ரசாயணம் தாக்கி இரு தொழிலாளர்கள் மயக்கம்.. போலீஸார் தீவிர விசாரணை

தேசிய கபடி வீராங்கனை தற்கொலை.. தலைமறைவான கணவரை தேடும் போலீசார்..!

வந்தே மாதரம் விவாதம்.. பிரியங்கா காந்திக்கு பதிலடி கொடுத்த அமித்ஷா..!

அடுத்த கட்டுரையில்