Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

போராட்டம் செய்வது போல் நடித்து தப்பியோடிய 20 சிறார் குற்றவாளிகள்

போராட்டம் செய்வது போல் நடித்து தப்பியோடிய 20 சிறார் குற்றவாளிகள்
, திங்கள், 11 ஜூலை 2016 (16:39 IST)
சென்னை கெல்லீஸ் அரசு கூர்நோக்கு இல்லம் என்னும் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இருந்து 20 சிறுவர்கள் போராட்டம் செய்வது போல் நடித்து தப்பிச் சென்றனர்.


 

 
சென்னை கெல்லீசில் அரசு சிறுவர் சீர்திருத்த பள்ளி உள்ளது. 18 வயதுக்கு கீழ்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் சிறுவர்கள் இங்கு அடைக்கப்பட்டுள்ளனர். சுமார் 300-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் இங்கு உள்ளனர்.
 
நேற்று இரவு 20 சிறுவர்கள் ஜெயிலில் இருந்து தப்பி ஓட முயன்றனர். அப்போது மற்றொரு தரப்பினர் அவர்களை தடுத்தனர். இதனால் 2 தரப்பினரிடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினரை சரமாரியாக தாக்கினார்கள். அந்த பகுதியே கலவரம் போல் காணப்பட்டது. பின்னர் காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர்.
 
இந்த நிலையில் இன்று பகல் 12 மணியளவில் 20 சிறுவர்களும் மொட்டை மாடிக்கு சென்று வார்டனுக்கு எதிராக தர்ணா போராட்டம் நடத்தினார்கள். திடீரென்று அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
 
இதனால் ஏராளமான காவல் துறையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் அயனாவரம் கவல்துறை உதவி ஆணையர் சங்கரன் அவர்கள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகிறார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பள்ளியை அடித்து நொறுக்கும் மாணவர்கள்: சுற்றுலா ரத்தானதால் ஆத்திரம் (விடியோ இணைப்பு)