2 பேரை கொலை செய்த ஹோமோசெக்ஸ் கல்லூரி மாணவரின் பரபரப்பு வாக்குமூலம்

Ilavarasan
வெள்ளி, 11 ஏப்ரல் 2014 (15:48 IST)
சேலத்தில் 2 பேரை கொலை செய்தது தொடர்பாக ஹோமோசெக்ஸ் பழக்கமுள்ள கல்லூரி மாணவர் பெரியசாமியை காவல்துறையினர் கைது செய்தனர். அவர் காவல்துறையில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
 
காவல்துறையினரிடம் அவர் கொடுத்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது, எனக்கு ஹோமோ செக்ஸ் பழக்கம் உள்ளது. என்னுடன் பழகியவர்களுடன் ஹோமோ செக்ஸ் வைத்து கொள்வேன். இதுபோல் காவலாளி ராம்குமாருக்கும் எனக்கும் பழக்கம் ஏற்பட்டது. அவரும், நானும் அடிக்கடி வெளியில் சுற்றி திரிவோம்.
 
நேற்று ராம்குமார் என்னை அழைத்தார். பின்னர் நான் சினிமா தியேட்டருக்கு சென்றேன். அங்கு ராம்குமாருக்கும் எனக்கும் வாய்தகராறு ஏற்பட்டது. இதில் கோபம் அடைந்த நான் கத்தியால் அவரை தாக்கினேன். இதில் அவர் இறந்து விட்டார். 
 
இதனால் பயந்த நான் கத்தியை பையில் மறைத்த வைத்துக் கொண்டு பழைய பேருந்து நிலையம் சென்றேன். அங்கு கத்தியை கழுவிட முயற்சி செய்தேன். அப்போது காவல் நிலையத்தை சேர்ந்த காவலர் ஒருவர் என்னை பார்த்து விட்டார். என்னை சந்தேகப்பட்ட அவர் என்னை பிடித்து விசாரித்தார். அப்போது நடந்ததை அவரிடம் கூறிவிட்டேன். பின்னர் அவர் கத்தியுடன் என்னை பிடித்து கொண்டார். பின்னர் உயர் காவல்துறை அதிகாரிகள் விசாரித்தனர். அவர்களிடம் நடந்ததை தெரிவித்தேன்.
 
சில நாட்களுக்கு முன்பு ஆட்டோ டிரைவர் மக்பூப்பாஷாவை சன்னியாசி குண்டு பகுதிக்கு அழைத்து சென்றேன். அங்கு எனக்கும், அவருக்கும் வாய்தகராறு ஏற்பட்டது. இதில் அவரை கொன்று உடலை முட்புதரில் வீசி விட்டேன் என்று அவர் வாக்குமூலத்தில் கூறியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
 
சேலம் கல்லூரி மாணவர் பெரியசாமி அடுத்தடுத்து கொலை செய்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சினிமாவில் வரும் கொலைகள் போல் பெரியசாமி 2பேரை கொன்று சாதாரணமாக இருந்து வந்துள்ளார். இவருக்கு வேறு யார் யாருடன் பழக்கம் உள்ளது என்றும் தனிப்படை காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவிடமிருந்து திருடிய சொத்துக்களை ஒப்படைக்க வேண்டும்.. வெனிசுலாவுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை..!

நடு ரோட்டில் கணவருக்கு மாரடைப்பு.. லிப்ட் கேட்டு கதறிய மனைவி.. யாரும் உதவாததால் பலியான உயிர்..!

வாய தொறந்து பேசுங்க!.. கம்முன்னே இருந்தா அரசியல்வாதியா?!.. விஜயை போட்டு பொளந்த அண்ணாமலை!.

60 ஏக்கரில் கார் பார்க்கிங்!.. 24 ஆம்புலன்ஸ்... ஈரோடு தவெக கூட்டத்துக்கு ஏற்பாடுகள்!...

தவெக தலைவர் விஜய் பிரச்சாரம்!.. ஈரோட்டில் பள்ளிக்கு விடுமுறை!...