Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண் குழந்தையை கூவிக் கூவி விற்ற பெண்கள்

Webdunia
வியாழன், 14 ஜூலை 2016 (11:13 IST)
ரயிலில் பிறந்து 6 நாட்களே ஆன பெண் குழந்தையை கூவிக் கூவி விற்க முயன்ற இரண்டு பெண்களை காவல் துறையினரிடம் சிக்கினர்.


 

 
ஈரோட்டில் இருந்து கோவை வழியாக பாலக்காடு செல்லும் பயணிகள் ரயிலில், இரண்டு பெண்கள் கைக்குழந்தையுடன் பயணித்துள்ளனர். அப்போது, சக பயணிகளிடம் யாருக்காவது குழந்தை வேண்டுமா என கேட்டு, குழந்தையை விற்க முயன்றுள்ளனர். இதில் அதிர்ச்சியடைந்த பயணிகள், குழந்தை உதவி மையத்துக்கு இது பற்றி புகார் அளித்திருக்கின்றனர். பயணிகளின் புகாரின் அடிப்படையில், கோவை ரயில் நிலையத்தில் அந்த இரண்டு பெண்களையும் குழந்தையுடன் கோவை ரயில்வே காவல் துறையினர் பிடித்தனர். 
 
விசாரணையில், இரண்டு பெண்களில் ஒருவர் குழந்தையின்மையால், பெண் குழந்தை ஒன்றை விலைக்கு வாங்கியுள்ளார். குழந்தை வாங்குவதில் சட்ட ரீதியான நடவடிக்கை எதுவும் பின்பற்றப்படாததால், சிக்கல் வரும் என கருதி மீண்டும் அந்த குழந்தையை ஒப்படைக்க சென்றபோது, யாரிடமாவது விற்றுவிடலாம் என்று முடிவு செய்ததாக, காவல் துறையினரிடம் தெரிவித்துள்ளனர்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

மம்தா பானர்ஜி குறித்து சர்ச்சை பேச்சு..! பாஜக வேட்பாளர் பிரச்சாரம் செய்ய தடை..!!

17 வயது சிறுமியுடன் உல்லாசம் அனுபவிக்க வந்த முதியவர்.. காவல்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை..!

தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்ததும், வேடத்தை கலைத்துவிட்டார் பிரதமர் மோடி! முதல்வர் ஸ்டாலின்..!

ராகுல் காந்தியை புகழ்ந்ததால் அதிருப்தி.. செல்லூர் ராஜூ மீது ஈபிஎஸ் நடவடிக்கையா?

சிங்கப்பூரில் பரவி வரும் புதிய வகை கொரோனாவால் பாதிப்பா? பொது சுகாதாரத்துறை விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments