Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அயோத்தி ராமர் கோவில்: புத்தாண்டு தினத்தில் 2 லட்சம் பக்தர்கள் வருகை..

Siva
வியாழன், 2 ஜனவரி 2025 (08:17 IST)
அயோத்தியில் உள்ள ராமர் கோவிலுக்கு நேற்றைய புத்தாண்டு தினத்தில் இரண்டு லட்சம் பக்தர்கள் வருகை தந்ததாக தகவல் வெளியாகியுள்ளன.

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில் கடந்த ஆண்டு ராமர் கோவில் திறக்கப்பட்ட நிலையில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த கோவிலுக்கு வருகை தந்து ஸ்ரீ ராமரை தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று புத்தாண்டில் மட்டும் இரண்டு லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்ததாகவும், ராமர் கோவில் வருவதற்கு இரவு 9 மணி வரை அனுமதிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

கடந்த ஆண்டின் கடைசி நாளான டிசம்பர் 31ஆம் தேதி  நடைபெற்ற ஆரத்தியில் பங்கேற்க ஏராளமான பக்தர்கள் வருகை தந்தார்கள் என்றும், அதன் பின்னர் புது வருட பிறப்பை முன்னிட்டு நாடு முழுவதிலும் உள்ள பக்தர்கள் அயோத்தி ராமர் கோவிலுக்கு அதிக அளவில் வருகை தந்தார்கள் என்றும் கூறப்படுகிறது.

அதிக கூட்டம் காரணமாக ஐந்து வரிசைகளில் தடை இன்றி பக்தர்கள் தரிசனம் செய்ய வழிவகை செய்யப்பட்டதாகவும், புத்தாண்டு தினத்திற்கு மறுநாளான இன்றும் கூட்டம் அதிகமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அயோத்தி ராமர் கோவில்: புத்தாண்டு தினத்தில் 2 லட்சம் பக்தர்கள் வருகை..

பா.ம.க. மகளிர் அணி போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுப்பு.. தடையை மீறி நடக்குமா?

விடுமுறை நீட்டிப்பு இல்லை.. இன்று முதல் பள்ளிகள் திறப்பு: பள்ளிக்கல்வித்துறை தகவல்..!

புர்கா அணிய தடை: சுவிட்சர்லாந்தில் அமலுக்கு வந்தது புதிய சட்டம்

500 அரசுப் பள்ளிகளை மேம்படுத்த கூட தமிழக அரசிடம் நிதியில்லையா? அண்ணாமலை கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments