Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 கோடி மதிப்புள்ள செல்போன்கள் அபேஸ் – நூதனமாக நடத்திய கொள்ளை!

Webdunia
வியாழன், 27 ஆகஸ்ட் 2020 (15:46 IST)
சென்னையில் இருந்து மும்பைக்கு எடுத்து செல்லப்பட்ட 2 கோடி ரூபாய் மதிப்புள்ள செல்போன்கள் கொள்ளை போனது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீபெரும்புத்தூரில் உள்ள சியோமி செல்பொன் தொழிற்சாலையில் இருந்து மும்பைக்கு செல்போன்கள் கண்டெய்னரில் ஏற்றி அனுப்பப்பட்டன. அந்த கண்டெய்னர் லாரியை இர்பான் என்ற உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஓட்டிச் சென்றுள்ளார். ஆந்திரா - தமிழ்நாடு எல்லையான சித்தூர் அருகே, சென்று கொண்டிருந்த போது மற்றொரு லாரியில் வந்த கும்பல் இர்பானைத் தாக்கிவிட்டு செல்போன்களை திருடிச் சென்றுள்ளனர்.

இது சம்மந்தமாக போலிஸார் நடத்திய விசாரணையில் நாராயணவனம் மற்றும் புத்தூர் கொள்ளையடித்துச் சென்ற லாரி கிடைத்துள்ளது. அதில் பாதிக்கும் மேற்பட்ட செல்போன்கள் அப்படியே இருந்துள்ளன. இதையடுத்து போலிஸார் அடுத்த கட்ட விசாரணையை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஓட்டுநர் இர்பான் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அந்த கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓடும் ரயிலில் இருந்து வீசப்பட்ட தண்ணீர் பாட்டில் தாக்கி சிறுவன் பலி.. அதிர்ச்சி சம்பவம்..!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு.. 2 காசு குறைந்து வர்த்தகம் முடிவு!

டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டணத்தை யூபிஐ மூலம் செலுத்தலாம்.. புதிய வசதி அமல்..!

மியான்மர் நிலநடுக்கம்.. 5 நாட்களுக்கு பின் ஒருவர் உயிருடன் மீட்பு..

வக்பு நிலங்களில் பள்ளிகள் கட்ட வேண்டும்: பிரதமருக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய இந்து மத துறவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments