Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனியார் பொழுதுபோக்கு பூங்காவில் ராட்டினம் உடைந்து விபத்து: 2 பேர் கைது

Webdunia
வியாழன், 12 மே 2016 (13:26 IST)
தாம்பரம் அருகேயுள்ள கிஷ்கிந்தா பொழுதுபோக்கு பூங்காவில் ராட்டினம் உடைந்து ஊழியர் பலியான சம்பவம் தொடர்பாக நிர்வாகிகள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.


 


தாம்பரம் அருகேயுள்ள கிஷ்கிந்தா பொழுதுபோக்கு பூங்காவில், ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன. இதனால், கோடை விடுமுறையை ஒடி சிறுவர், சிறுமியர்கள் முதல் பெரியவர்களை வரை அங்கு சென்று வருகின்றனர்.

இதனையடுத்து, இந்த கோடை விடுமுறையில், ‘டிஸ்கோ’ என்ற புதுவகை ராட்டினத்தை அறிமுகப்படுத்த முனைந்தது. இதற்காக, நேற்று மாலை ‘டிஸ்கோ’ ராட்டினத்தை சோதனை செய்து பார்க்க முடிவு செய்தனர். அப்போது, ராட்டினம் எதிர்பாராத வகையில் உடைந்து விழுந்தது. இதில் ராட்டினத்தில் அமர்ந்திருந்த ஊழியர்களும் படுகாயம் அடைந்தனர். மேலும், சோமங்கலத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

படுகாயம் அடைந்தவர்களை குரோம்பேட்டை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து சோமங்கலம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்டாகிராமில் வந்த லிங்க்: க்ளிக் செய்த அடுத்த நிமிடத்தில் பணத்தை இழந்த இளம்பெண்..

ஸ்டெர்லைட் தடையை மறுஆய்வு செய்ய கோரிய மனு : உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பாஜக பயப்படுகிறது.. காங்கிரஸ் பிரமுகர் விமர்சனம்..!

மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய இளைஞரின் தாய் மீது புகார்.. நடவடிக்கை எடுக்கப்படுமா?

ஐதராபாத்தில் தயாரிப்பாளர் வீட்டில் பதுங்கியிருக்கின்றாரா கஸ்தூரி? தனிப்படை விரைவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments