18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கு: தீர்ப்பு தேதி குறித்த தகவல்

Webdunia
புதன், 10 அக்டோபர் 2018 (07:31 IST)
தமிழகத்தை ஆட்சி செய்து வரும் அதிமுக அரசுக்கு திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று கருதப்படும் 18 எம்.எல்.ஏக்களின் தகுதிநீக்க வழக்கின் விசாரணை முடிந்து தீர்ப்புக்காக காத்திருக்கும் நிலையில் இந்த வழக்கின்  தீர்ப்பு வரும் 22ஆம் தேதிக்கு பின்னர் வழங்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

18 பேர் தகுதி நீக்க வழக்கில் தலைமை நீதிபதி அமர்வு, இருவேறு தீர்ப்புகளை வழங்கியதால் வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில் மூன்றாவது நீதிபதியான நீதிபதி சத்தியநாராயணன் அவர்கள் இந்த வழக்கின் விசாரணையை முடித்துவிட்டு தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளார்.

இந்த நிலையில் நாளை முதல் நீதிபதி சத்தியநாராயணன் விடுமுறையில் செல்வதாலும், 13ம் தேதி முதல் 21-ம் தேதி வரை உயர்நீதிமன்றத்திற்கு தசரா விடுமுறை என்பதாலும் வரும் 22ஆம் தேதிக்கு பின்னர் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என நீதிமன்ற வட்டாரங்கள் கூறுகின்றன

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டை விட்டு வெளியேறும் முன்னர் ஆர்.என். ரவி போட்ட தரமான உத்தரவு.. பரபரப்பு தகவல்..!

நேபாளத்தில் பாரம்பரிய கட்சிகள் படுதோல்வி.. GenZ ஆதரவு பெற்ற பாடகர் கட்சி அபார வெற்றி..!

சென்னை எழும்பூர் பார்க்கிங் மூடப்படும்.. மாற்று ஏற்பாடு செய்து கொள்ள மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு..!

எங்களை விட தேமுதிகவுக்கு அதிகமா?!.. கோபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி!...

10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவிக்கு திடீரென பிறந்த குழந்தை.. குப்பை தொட்டியில் வீசியதால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments