Webdunia - Bharat's app for daily news and videos

Install App

16 வயது சிறுமியின் விலை 1 லட்சம் ரூபாய்: இரண்டாவது திருமணம் செய்த 41 வயது குமரி மீனவர்!

16 வயது சிறுமியின் விலை 1 லட்சம் ரூபாய்: இரண்டாவது திருமணம் செய்த 41 வயது குமரி மீனவர்!

Webdunia
வியாழன், 22 ஜூன் 2017 (14:57 IST)
நாகர்கோவில் அருகே 16 வயது சிறுமி ஒருவரை 1 லட்சம் ரூபாய்க்கு விலைக்கு வாங்கி இரண்டாவது திருமணம் செய்து அந்த சிறுமியை கொடுமைப்படுத்தி வந்த மீனவர் ஒருவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.


 
 
குமரி மாவட்டம் பள்ளம் மேசானி நகரில் ராபர்ட் பெல்லார்மின் என்ற 41 வயதான நபர் வசித்து வந்தார். மீன்பிடித்தொழிலாளியான இவருக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன.
 
வெளிநாட்டுக்கும் சென்று மீன்பிடி தொழில் செய்து வந்த ராபர்ட் பெல்லார்மின் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தார். குழந்தைகளை மனைவி வளர்த்து வரும்வேளையில் ராபர்ட் பெல்லார்மின் முட்டம் துறைமுகத்தில் கேண்டீன் வைத்தும், மீன் ஏலம் போடும் வேலை செய்தும் வந்துள்ளார்.
 
இந்நிலையில் இரண்டாவது திருமணம் செய்ய முடிவெடுத்த 41 வயதான ராபர்ட் பெல்லார்மினுக்கு உள்ளூரில் யாரும் பெண் கொடுக்க முன்வரவில்லை. இதனால் நடனம் ஆடும் கும்பலை சேர்ந்த பெண் ஒருவரின் உதவியுடன் 16 வயது சிறுமியை 1 லட்சம் ரூபாய்க்கு விலைக்கு வாங்கி இரண்டாவது திருமணம் செய்துள்ளார்.
 
இதனையடுத்து அந்த சிறுமியுடன் நாகர்கோவில் குருசடி அருகே தனியாக வசித்து வந்த ராபர்ட் பெல்லார்மின், சிறுமியை தனது குடும்பத்தில் உள்ளவர்களுடனும், வெளியில் உள்ளவர்களுடனும் பேசக்கூடாது என மிரட்டி வீட்டில் பூட்டியே வைத்துள்ளார். தான் வேலைக்கு செல்லும் போதும் சிறுமியை வீட்டில் வைத்து பூட்டிவிட்டே சென்று வந்துள்ளார்.
 
இதனால் சிறுமி வீட்டில் பூட்டி வைக்கப்படுவதை கவனித்த அருகில் உள்ளவர்கள் குழந்தைகள் உதவி மையத்துக்கு போன் செய்து தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து அங்கு சென்ற அதிகாரிகள் சிறுமியை மீட்டனர். மேலும் தலைமறைவாகியுள்ள ராபர்ட் பெல்லார்மின்னை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.



 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கவுரவ விரிவுரையாளர்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்ப்பதா? அன்புமணி கண்டனம்..!

டிரம்ப் மனமாற்றத்தால் 1471 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் குஷி..!

25 கோடி ஏழைகளை பணக்காரர்களாக்கியுள்ளோம்! பாஜகவின் சாதனைகள் என்ன? - பட்டியலிட்ட பிரதமர் மோடி!

ஜனாதிபதி மாளிகையில் சி.ஆர்.பி.எப் வீராங்கனைக்கு திருமணம்.. வரலாற்றில் முதல் முறை..!

24 மணிநேரத்தில் அரசியல் சாசனப்படி முடிவெடுக்க வேண்டும்: ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்..

அடுத்த கட்டுரையில்
Show comments