Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை 14வது தடுப்பூசி முகாம் - முதல் தவணையை செலுத்தாதவர்களுக்கு அழைப்பு!

Webdunia
வெள்ளி, 10 டிசம்பர் 2021 (11:23 IST)
முதல் தவணையை செலுத்தாதவர்களுக்கு அழைப்பு, நாளை 14வது தடுப்பூசி மையம் தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்ட உள்ளது. 
 
தமிழகத்தில் கடந்த 13 வாரங்களாக கொரோனா வைரஸ் தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டு லட்சக்கணக்கானவர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது என்பது தெரிந்ததே. 
 
அந்த வகையில் நாளை 14வது தடுப்பூசி மையம் தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்ட உள்ளது. தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் மையங்களில் இந்த முகாம்கள் நடத்த சுகாதாரத்துறை ஏற்பாடு செய்துள்ளது. சென்னையில் 1,600 முகாம்கள் நடத்தப்படுவதாக மாநகராட்சி அறிவித்துள்ளது.
 
நேற்று வரை 7,24,30,000 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இன்னும் ஒரு கோடி பேர் முதல் தவணை தடுப்பூசியும் 80 லட்சம் பேர் 2-வது தவணையும் போடாமல் உள்ளனர். மேலும் இந்த தடுப்பூசி முகாம் இரண்டாவது டோஸ் போடுபவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
முதல் டோஸ் இதுவரை போடாதவர்கள் இந்த தடுப்பூசி மையத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறும் அதேபோல் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்துபவர்களும் மெகா தடுப்பூசி முகாமை பயன்படுத்திக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ்மாக் மதுபானம் குறித்து அமைச்சர் துரைமுருகன் கூறும் கருத்து உண்மைதான்.. அண்ணாமலை

அதிமுக பிரமுகர் கொலை.. ஆடு விற்பனை தொடர்பான முன்பகையா? 3 பேர் கைது

பீகாரை தொடர்ந்து ஜார்கண்டிலும் இடிந்து விழும் பாலங்கள்! மக்கள் அதிர்ச்சி!

பிளக்ஸ் போர்டு வைக்கும் போது மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு.. திருவாரூரில் அதிர்ச்சி..!

சென்னையில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்.. அடிபம்பிற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments