Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடியின் அறிவிப்பால் குப்பையாகும் 14 லட்சம் கோடி ரூபாய்

Webdunia
வியாழன், 10 நவம்பர் 2016 (14:12 IST)
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் 14 லட்சம் கோடி ரூபாய் அளவிலான பணம் குப்பையாக மாற உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

 
இந்தியாவில் 500 ரூபாய் நோட்டுகள் ரூ.7.85 லட்சம் கோடியும், 1000 ரூபாய் நோட்டுகள் ரூ.6.33 லட்சம் கோடியும் புழக்கத்தில் உள்ளதாக ரிசர்வ் வங்கி தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
பெரும்பாலான மக்களிடம் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளது. இந்நிலையில் மத்திய அரசின் அறிவிப்பால் சாமானிய மக்கள்தான் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
 
இதுகுறித்து சென்னை பல்கலைக்கழக பொருளாதார பிரிவு பேராசிரியர் கூறியதாவது:-
 
மோடியின் அறிவிப்பால் பாதிப்புதான் அதிகாமாக உள்ளது. இந்த அறிவிப்பு நீண்ட நாட்கள் கழித்து வேண்டுமானால் சாதகமாக அமையலாம். ஆனால் தற்போது ஏழை எளிய மக்களையே பெரிதும் பாதித்துள்ளது.
 
கறுப்பு பணத்தின் புழக்கம் ஓரளவு குறைய வாய்ப்புள்ளது. இதனால் தேவை அதிகரித்துள்ளது. அடுத்த இரண்டு மாதத்தில் நுகர்வு குறைந்தால் நிறுவனங்களின் லாபம் குறையும். இது இந்திய பொருளாதார சந்தையை வீழ்ச்சியடைய செய்யும்.  
 
இன்று ரூபாயின் தேவை குறைந்து அமெரிக்க டாலரின் தேவை அதிகரித்துள்ளது. இதனால் இந்திய ரூபாயின் மதிப்பு பாதிக்கப்படும். இந்தியாவில் அதிகளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வருகிறோம். ரூபாயின் மதிப்பு கீழே போகும்போது அதிக டாலர் கொடுத்து கச்சா எண்ணெய் வாங்க வேண்டிய நிலையில் டாலர் மதிப்பு உயரும், என்றார்.

 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

"விஸ்வரூபமெடுக்கும் திருப்பதி லட்டு விவகாரம்" - சிறப்பு விசாரணை குழுவை அமைத்தது ஆந்திர அரசு..!!

தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலந்தால் கோடி கணக்கில் அபராதம் - நீதிமன்றம் எச்சரிக்கை..!!

பெற்ற தாயை பலாத்காரம் செய்த 48 வயது மகன்.. நீதிமன்றம் விதித்த அதிரடி தீர்ப்பு..!

திருப்பதி லட்டில் குட்கா புகையிலை.. அடுத்த சர்ச்சையால் பரபரப்பு..!

இலங்கையில் புதிய பிரதமராக பதவியேற்ற பெண்.. எளிமையாக நடந்த பதவியேற்பு விழா..!

அடுத்த கட்டுரையில்
Show comments