Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பன்னிரண்டாம் வகுப்பில் 494 மதிப்பெண் எடுத்த பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை!

J.Durai
வெள்ளி, 10 மே 2024 (14:30 IST)
தேனி மாவட்டம் கம்பம் கிளப் ரோடு மணி நகரத்தில் குடியிருக்கும் கண்ணன் மகன் ஜெயாவர்மன் (வயது 17) இவர் கம்பத்தில் உள்ள தனியார் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார் தற்பொழுது நடைபெற்ற பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 600 க்கு 494 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.
 
இந்த நிலையில் நேற்று மாணவன் வீட்டில் தனியாக இருந்த பொழுது தனது வீட்டின் மூன்றாவது மாடியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான் வெகு நேரமாக வீட்டில் ஆள் இல்லாததால் உறவினர்கள் மாணவனை தேடிப் பார்த்த பொழுது மாடியில் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
 
பின்பு கம்பம் தெற்கு காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தூக்கில் தொங்கிய மாணவனை பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
 
மேலும் நடந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

17 ஆன்மிக நகரங்களில் மது விற்பனை செய்ய தடை.. அதிரடி உத்தரவு பிறப்பித்த முதல்வர்..!

எடப்பாடி அருகே இளம்பெண், அவரது கணவர் கடத்தல்.. பட்டப்பகலில் நடந்த கொடூரம்..!

10 ரூபாய்க்கு சோறு மோசடி.. 100 கோடி பணம்! சதுரங்க வேட்டை காந்திபாபுவை மிஞ்சிய Scam! - அதிர்ச்சியில் உறைந்த போலீஸ்!

புதிய உச்சத்தை நோக்கி தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 240 ரூபாய் உயர்வு..!

பொங்கல் பரிசை வந்து வாங்கிக்கோங்க.. போனில் அழைக்கும் ரேஷன் கடை ஊழியர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments