Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டில் 2 நாளில் +2 மதிப்பெண் வெளியீடு?

Webdunia
புதன், 14 ஜூலை 2021 (14:18 IST)
தமிழ்நாட்டில் ரத்து செய்யப்பட்ட 12 ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் ஓரிரு நாட்களில் வெளியாகும் என தகவல். 

 
இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் காரணமாக பள்ளி, கல்லூரிகள் பல செயல்படாமல் இருந்து வருகின்றன. இந்நிலையில் கொரோனா காரணமாக சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் பயிலும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி அளிப்பதாக அறிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து மாநில பாடத்திட்டங்களில் உள்ள மாநிலங்கள் சிலவும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வின் தேர்ச்சி அறிவித்தன. 
 
இந்நிலையில், தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் கணக்கீட்டு பற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதன் விவரம் பின்வருமாறு...  
1.    10 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு  (உயர் மதிப்பெண் பெற்ற 3 பாடங்களுடைய சராசரி) -  50%    
2.    11 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு (ஒவ்வொரு பாடத்திலும் பெற்ற எழுத்துமுறை (மதிப்பெண் மட்டும்) -  20%    
3.    12 ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வு / அக மதிப்பீடு (internals )  -  30%  
 
மேலும், தமிழ்நாட்டில் ரத்து செய்யப்பட்ட 12 ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் ஓரிரு நாட்களில் வெளியாகும் என தகவல். அதாவது மதிப்பெண் சரிபார்க்கும் பணி நிறைவடைந்துள்ளதால் முன்கூட்டியே மதிப்பெண் விவரங்கள் நாளை அல்லது நாளை மறுநாள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியின் மகன் வீட்டில் பாலியல் தொழில்; சென்னையில் சிக்கிய கும்பல்!

கடலில் மூழ்கிய மீனவர்களின் படகு.. மீட்க சென்ற படகும் மூழ்கியதால் பரபரப்பு..!

பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்த 34 வயது பெண்.. சுற்றி வளைத்து கைது செய்த போலீசார்..!

ராமதாஸை அடுத்து எடப்பாடி பழனிச்சாமிக்கும் வேலையில்லை.. அமைச்சர் சேகர்பாபு..!

டெல்லி பிவிஆர் தியேட்டர் அருகில் திடீரென வெடித்த மர்ம பொருள்.. தீவிரவாதிகள் சதியா?

அடுத்த கட்டுரையில்
Show comments