11-ஆம் வகுப்பு மாணவியை அடுத்தடுத்து பாலியல் பலாத்காரம் செய்த பாலிடெக்னிக் மாணவன்!

11-ஆம் வகுப்பு மாணவியை அடுத்தடுத்து பாலியல் பலாத்காரம் செய்த பாலிடெக்னிக் மாணவன்!

Webdunia
புதன், 26 ஏப்ரல் 2017 (11:14 IST)
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே 11-ஆம் வகுப்பு படித்து வந்த மாணவியை அந்த பகுதியை சேர்ந்த பாலிடெக்னிக் படித்து வந்த 20 வயதான மணவன் ஒருவன் மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார்.


 
 
பாதிக்கப்பட்ட மாணவியின் வீட்டின் அருகே தான் உள்ளது அந்த மாணவனின் வீடு. கடந்த வாரம் மாணவி தனது வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் மதியம் தனியாக நின்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அந்த மாணவன் மாணவியிடம் திருமண ஆசை காட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.
 
இதனையடுத்து இதுகுறித்து வெளியில் சொன்னால் கொன்றுவிடுவதாகவும் மிரட்டியுள்ளான் அந்த மாணவன். இதனால் பயந்த மாணவி இதனை பற்றி யாரிடமும் கூறவில்லை. இந்நிலையில் நேற்று வீட்டில் தனியாக இருந்த மாணவி தனது வீட்டின் பின்புறம் நின்றுகொண்டிருந்தார்.
 
அப்போது அங்கு வந்த அந்த மாணவன் மீண்டும் அந்த மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து மாணவி நடந்த சம்பவங்களை பெற்றோரிடம் கூறினார். இதுகுறித்து வள்ளியூர் மகளிர் காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து தலைமறைவான அந்த மாணவனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

82 லட்சம் மதிப்பீட்டில் திறக்கப்பட்ட பூங்காவில் முறைகேடு.. கோவையில் அதிர்ச்சி

இனிமே விஜயை நம்பி யூஸ் இல்ல!.. வேறு கட்சிக்கு தாவிய தாடி பாலாஜி...

விஜய்கிட்ட கேள்வி கேளுங்க!... அப்ப புரியும்!.. போட்டு தாக்கிய உதயநிதி...

'இளம் பெரியார்' என்று அழைப்பது அந்த பெரியவருக்கே செய்யும் அவமானம்.. உதயநிதி குறித்து ஆதவ் அர்ஜூனா

பில் இவ்வளவா? சென்னை உணவகத்தில் சாப்பிட்ட நியூசிலாந்து சிறுவனின் ஆச்சரியம்..!

அடுத்த கட்டுரையில்