Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது – வழக்கம் போல மாணவிகள் அசத்தல் !

Webdunia
திங்கள், 29 ஏப்ரல் 2019 (10:03 IST)
10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. மாணவர்களின் பெற்றோர் அலைபேசிகளுக்கு தேர்வு முடிவுகள் அனுப்பப்பட்டுள்ளன.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 16ம் தேதி முதல் ஏப்ரல் 20ம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 12 ஆயிரத்து 546 பள்ளிகளைச் சேர்ந்த 9 லட்சத்து 60 ஆயிரம் மாணவ- மாணவிகளும், ஆயிரம் தனித் தேர்வர்களும் எழுதினர். இந்நிலையில் தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகியுள்ளன. தேர்வு முடிவுகள் மாணவர்கள் ஏற்கெனவே வழங்கிய கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். இருப்பினும் இணையதளங்கள் மூலமாகவும் மாணவ, மாணவிகள் தங்களுடைய தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

தற்போது முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் மொத்த தேர்ச்சி 95.25  சதவீதமாகவும் மாணவர்கள் தேர்ச்சி சதவீதம் 93.5 சதவீதமாகவும் மாணவிகள் தேர்ச்சி சதவீதம் 87 சதவீதமாகவும் உள்ளது.

தேர்வு முடிவுகளை இணையத்தில் அறிந்துகொள்ள
www.tnresults.nic.in
www.dge1.tn.nic.in 
www.dge2.tn.nic.in 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுகவை கண்டித்து.. தன்னை தானே சாட்டையால் அடித்துக் கொண்ட அண்ணாமலை!

இந்தியாவை தூக்கி நிறுத்திய மன்மோகன் சிங்கின் முக்கிய திட்டங்கள்!

தொடர் ஏற்றத்தில் தங்கம் விலை.. மீண்டும் 200 ரூபாய் உயர்வு..!

நீண்ட இடைவெளிக்கு ஏற்றத்தில் பங்குச்சந்தை.. சென்செக்ஸ் 500 புள்ளிகள் உயர்வு..!

மன்மோகன் சிங் மறைவு: நேரில் அஞ்சலி செலுத்த டெல்லி புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்!

அடுத்த கட்டுரையில்
Show comments