Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று வெளியாகிறது 10, 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்! எந்த இணையதளத்தில் பார்க்கலாம்?

Webdunia
வெள்ளி, 19 மே 2023 (07:51 IST)
இன்று காலை 10 மணிக்கு பத்தாம் வகுப்பு மற்றும் இன்று மதியம் 2 மணிக்கு 11ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாக இருப்பதாக தமிழக அரசின் தேர்வு துறை இயக்ககம் தகவல் வெளியிட்டுள்ளது
 
கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதம் நடந்த பத்தாம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு பொது தேர்வு நடந்த நிலையில் இதன் முடிவுகள் மே 19ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அரசு தேர்வு துறை இயக்ககம் தெரிவித்திருந்தது. 
 
இன்று பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் அமைந்துள்ள டாக்டர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கட்டிடத்தின் முதல் தளத்தில் இந்த தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன. பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முடிவுகள் மதியம் 2:00 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இந்த தேர்வு முடிவுகளை http://tnresults.nic.in , http://dge.tn.nic.in ஆகிய இணையதளங்களில் சென்று தெரிந்து கொள்ளலாம். மாணவர்கள் தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைக்கப்பட்டுள்ள தேசிய தகவல் இயல் மையங்களிலும் மாணவர்கள் கட்டணம் இன்றி தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். அது மட்டும் இன்றி மாணவர்களின் செல்போன் எண்ணுக்கும் தனி தேர்வர்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது வழங்கிய செல்போன் எண்ணிற்கும் குறுஞ்செய்தியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விசிக, நாம் தமிழர்கள் மாநில கட்சிகள் அங்கீகாரம்: இந்திய தேர்தல் ஆணையம்!

போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு சாதனை ஊக்கத்தொகை.. அரசாணை வெளியீடு!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அறிவிப்பு.. காங்கிரஸ் அதிருப்தியா?

லாஸ் ஏஞ்சல் காட்டுத்தீயை அணைக்க கனடா உதவி.. விரைந்தது விமானப்படை..!

ஆளுங்கட்சி எதிர்க்கட்சிகளை சமமாக பாவிக்க வேண்டும்.. தமிழக போலீசாருக்கு நீதிமன்றம் அறிவுரை..!

அடுத்த கட்டுரையில்
Show comments