10 நா‌ளி‌ல் வி.ஏ.ஓ. தேர்வானவர்களுக்கு நியமன ஆணை - ஐகோர்ட்

Webdunia
சனி, 25 பிப்ரவரி 2012 (10:37 IST)
வி.ஏ.ஓ. பணிக்கு தேர்வான அனைவருக்கும் 10 நாட்களுக்குள் பணி நியமன ஆணையை அனுப்ப வேண்டும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் உத்தரவிட ்‌டு‌ள்ளது.

காலியாக உள்ள வி.ஏ.ஓ. பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுகளை நடத்தி, இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டது. ஆனா‌ல் தேர்வு செய்யப்பட்ட வி.ஏ.ஓ.க்களுக்கு பணி நியமன ஆணைகள் அனுப்பப்படவில்லை.

இ‌ந்த ‌நில‌ை‌யி‌ல் ப‌ணி ‌நியமன‌ம் வழ‌ங்க‌க் கோ‌ரி சென்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் வழக்கு தொடர‌ப்ப‌ட்டது. வி.ஏ.ஓ. பணிக்காக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு 4 வாரங்களுக்குள் பணி நியமன ஆணைகளை அனுப்ப வேண்டும் என்று நீதிபதி கே.சுகுணா கடந்த டிசம்பர் 23 ஆ‌ம் தேதி உத்தரவிட்டார். ஆனால் அந்த காலகட்டத்துக்குள் பணி ஆணைகள் அனுப்பப்படவில்லை.

டி.என்.பி.எஸ்.சி. சம்பந்தப்பட்ட வழக்கு புலன் விசாரணை நீடிப்பதால், ஏற்கனவே பிறப்பித்த உத்தரவில் சற்று மாற்றம் செய்ய வேண்டுமென்று தமிழக அரசு மனு தாக்கல் செய்தது.

இந்த மனுவை நீதிபதி கே.சுகுணா விசாரித்தார். லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்தும் விசாரணையின் முடிவுக்கு, வி.ஏ.ஓ. பணி நியமனம் கட்டுப்பட்டது என்ற நிபந்தனையை கடந்த உத்தரவில் சேர்க்க வேண்டும் என்று அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது.

அதைத் தொடர்ந்து, இந்த நிபந்தனையுடன், பணி நியமன ஆணைகளை தேர்வு செய்யப்பட்ட அனைவருக்கும் இன்னும் 10 நாட்களுக்குள் டி.என்.பி.எஸ்.சி. அனுப்ப வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 ஆண்டுகள் அமெரிக்காவில் வாழ்ந்த இந்திய பெண்: க்ரீன் கார்டு இண்டர்வியூ போது கைது..!

நாளைய பாமக ஆர்ப்பாட்டத்தில் தவெகவும் பங்கேற்காது? அதிமுகவும் பங்கேற்பு இல்லை..

மோடி காரை ஓட்டிய ஜோர்டான் நாட்டு இளவரசர்.. புகைப்படங்களை பகிருந்த பிரதமர்..!

மகாத்மா காந்தி என் குடும்பத்தை சேர்ந்தவர் அல்ல; ஆனால்.. பிரியங்கா காந்தி உருக்கம்..!

கோவில் விழாவில் கலந்து கொள்ள நடிகர் திலீப்புக்கு எதிர்ப்பு.. நிகழ்ச்சியில் இருந்து விலக முடிவு..!

Show comments