Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுற்றுச்சூழல் அதிகாரி இல்லத்தில் இருந்து கோடிக்கணக்கில் பறிமுதல்: லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி!

Webdunia
செவ்வாய், 15 டிசம்பர் 2020 (10:38 IST)
சுற்றுச்சூழல் அதிகாரி இல்லத்தில் இருந்து கோடிக்கணக்கில் பறிமுதல்
லஞ்ச ஒழிப்புத் துறையினர் அவ்வப்போது அரசு அலுவலகங்களில் அதிரடியாக சோதனை செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருவது தெரிந்தது. அந்த வகையில் நேற்றும் ஒரு சில அரசு அலுவலகங்களில் சோதனை நடத்திய நிலையில் இன்று திடீரென சுற்றுச்சூழல் அதிகாரி பாண்டியன் என்பவரின் இல்லத்தில் அதிரடியாக லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை செய்தனர் 
 
இன்று சென்னையில் உள்ள பாண்டியன் இல்லத்தில் சோதனை செய்ததில் அவரது இல்லத்திலிருந்து ரூபாய் 1.37 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
மேலும் சுற்றுச்சூழல் அதிகாரி பாண்டியன் வீட்டில் 3 கிலோ தங்க நகைகள் மற்றும் ஒன்றரை லட்சம் மதிப்புள்ள வெள்ளிப் பொருள்கள் மேலும் வைரம் ஆகியவையும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்னும் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு துறையினர் செய்து வருவதாகவும் மேலும் சில ஆவணங்கள் அவரது இல்லத்தில் இருந்து பறிமுதல் செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் லஞ்ச ஒழிப்பு துறை வட்டாரங்கள் கூறுகின்றன

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லக்கி பாஸ்கர் விமர்சனம்: மிடில் கிளாஸ் குடும்பஸ்தராக ரசிகர்களை ஈர்த்த துல்கர் சல்மான்

‘அமரனாக’ துப்பாக்கி பிடித்த சிவகார்த்திகேயன் வெற்றி பெற்றாரா? ஊடகங்கள், ரசிகர்கள் கூறுவது என்ன?

இன்று மாலை 19 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

தீபாவளி பட்டாசு வெடிவிபத்து: இதுவரை 21 பேர் தீக்காயம்..!

வயநாடு தேர்தல் எதிரொலி: மலையாளத்தில் தீபாவளி வாழ்த்து தெரிவித்த பிரியங்கா காந்தி!

அடுத்த கட்டுரையில்
Show comments