Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விமானத்தின் கழிவறை தொட்டியில் கிடந்த 1.20 கோடி மதிப்பிலான தங்கம்

Webdunia
வெள்ளி, 22 டிசம்பர் 2017 (07:54 IST)
துபாயில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தின் கழிவறை தொட்டியில்  இருந்த 4 கிலோ தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது குறித்து அவர்கள் விசாரித்து வருகின்றனர்.
துபாயிலி்ருந்து  சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு  விமானம் வந்தது. துப்புரவு ஊழியர்கள் அவ்விமானத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது விமானத்தில் உள்ள கழிவறை தொட்டியில் 2 கருப்பு நிற பைகள் இருந்ததை ஊழியர்கள் கண்டு உடனே விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். பாதுகாப்பு அதிகாரிகள் பைகளை பிரித்து சோதனை செய்தபோது அதில் 4 தங்க கட்டிகள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் தங்க கட்டிகள் இருந்த பையை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். 4 கிலோ எடை கொண்ட அந்த தங்க கட்டிகளின் மதிப்பு ரூ.1 கோடியே 20 லட்சம் என சுங்க இலாகா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து விமானத்தில் தங்கத்தை கடத்தி வந்தவர்கள் யார் என்பது குறித்து சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி

ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

பால் உற்பத்தியில் சாதனை என கூறுவது மிகப்பெரிய மோசடி: பால் முகவர்கள் சங்கம்

வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்.. மிக கனமழைக்கு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments