Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

'ஆசிரியர்கள் தொடர்ந்து படித்துகொண்டே இருக்கவேண்டும்'

ஈரோடு செ‌ய்‌தியாள‌ர் வேலு‌ச்சா‌மி

'ஆசிரியர்கள் தொடர்ந்து படித்துகொண்டே இருக்கவேண்டும்'
ஈரோடு , சனி, 2 ஜனவரி 2010 (11:21 IST)
webdunia photo
WD
''ஆசிரியர்கள் தொடர்ந்து பல்வேறு புத்தங்களை படித்து தங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்'' என மாவட்ட கல்வி அதிகாரி பொன்குமார் கூ‌றினா‌ர்.

அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தின் கீழ் மாநில அளவில் உள்ள சமூகவியல் ஆசிரியர்களுக்கு படைப்பாற்றல் பயிற்சி முகாம் சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் வித்யா நிகேதன் பள்ளி சீரங்கம்மாள் கலையரங்கத்தில் நடைபெற்றது. முகாமிற்கு வந்த அனைவரையும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர்.முருகேசன் வரவேற்றார்.

ஈரோடு மாவட்ட கல்வி அதிகாரி பொன்குமார் தலைமை தாங்கி பயிற்சி முகாமை துவக்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசுகை‌யி‌ல், பழங்கால வேதங்கள் மற்றும் வரலாற்று நிகழ்வுகளை மாணவர்களுக்கு புரியும்படியாக தொகுத்து சுவையுடன் ஆசிரியர்கள் கற்றுதர வேண்டும்.

பொதுவாக கல்வி‌த்துறையில் வெற்றிபெற வேண்டும் என்றால் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கற்றுதருவது அறிந்து கொள்ளுதல், புரிந்துகொள்ளுதல் அதை மேம்படுத்துதால் என்று மூன்றின் அடைப்படையில் இருக்கவேண்டும்.

ஆசிரியர் என்பவர் தொடர்ந்து படித்துக்கொண்டே இருக்க வேண்டும். ஆசிரியர்கள் வரலாற்றை முழுமையாக போதிக்க வேண்டும். மாணவர்களுக்கு தெரிந்தது ஆசிரியர்களுக்கு தெரியவில்லை என்றால் அது அவமானம் எ‌ன்று மாவட்ட கல்வி அதிகாரி பொன்குமார் பேசினார்.

பயிற்சி முகாமில் கோபி கல்வி அதிகாரி காளியண்ணன், பண்ணாரி அம்மன் வித்யா நிகேதன் பள்ளியின் மக்கள் தொடர்பு அதிகாரி ஏ.என்.குழந்தைசாமி, முதல்வர் ரீட்டா மனோகரன், பண்ணாரி அம்மன் ரூரல் பவுண்டேசன் கல்வி பிரிவு ஒருங்கிணைப்பாளர் பி.சண்முகவேல், ஈரோடு கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வி.பன்னீர்செல்வம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முடிவில் கோபி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலசண்முகம் நன்றி கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil