விரைவில் தேசிய நகர்ப்புற சுகாதார இயக்கம் : அமை‌ச்ச‌ர் அ‌ன்பும‌ணி!

Webdunia
திங்கள், 3 மார்ச் 2008 (17:43 IST)
நகர்ப்புற மக்களுக்கு பயனளிக்கும் வகையில் தேசிய நகர்ப்புற சுகாதார இயக்கம் விரைவில் துவக்கப்படும். நகர்ப்புறங்களில் குடிசை வாழ் மக்களுக்கு சுகாதார காப்புறுதி வழங்கப்படும் என்று மத்திய சுகாதார அமைச்சர் அன்புமணி தெரிவித்தார்.

தமிழ்நாட்டில ் செய‌ல்படு‌ம ் தேசிய கிராமப்புற சுகாதார இயக்கம ் ப‌ற்‌ற ி செ‌ன்னை‌யி‌ல ் நட‌ந் த ஆய்வுக் கூட் ட‌ த்‌தி‌ல ் ப‌ங்கே‌ற் ற ‌ பிறக ு செ‌ய்‌தியாள‌ர்களை‌ச ் ச‌‌ந்‌தி‌த் த அமைச்சர் அன்புமணி கூ‌றியதாவது :

தேசிய நகர்ப்புற சுகாதார இயக்கம் விரைவில் துவக்கப்படவுள்ளது. நாட்டில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்கள் 429 உள்ளன. இதிலுள்ள மொத்த மக்கள் தொகை 22 கோடியாகும். இந்த புதிய திட்டத்தின்படி இந்நகரங்களில் குடிசைப் பகுதியில் வசிக்கும் சுமார் ஐந்தரை கோடி மக்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தப்படும்.

ஒவ்வொரு 2,000 மக்களுக்கு 'உஷா' என்றழைக்கப்படும் நகர்ப்புற சமூக சுகாதார பணியாளர் நியமிக்கப்படுவார். இதைப் போல 100 வீடுகளுக்கு ஒரு 'மகிளா ஆரோக்கிய சமிதி' என்ற குழு அமைக்கப்படும். ஒவ்வொரு குழுவுக்கு தலா ரூ.5,000 நிதி அளிக்கப்படும். இந்த நிதியின் மூலம் அந்த 100 வீடுகளுக்கு தேவையான சுகாதார வசதிகள் செய்து தரப்படும்.

இதுதவிர 50,000 மக்களு‌க்கு ஒரு சுகாதார மையம் அமைக்கப்படும். இதில் ஒரு மரு‌த்துவ‌ர், இரண்டு செவிலியர்கள், ஐந்து சுகாதார பணியாளர்கள் நியமிக்கப்படுவர். இந்த ஐந்தரை கோடி மக்களுக்கும் சுகாதார காப்புறுதி வழங்கப்படும். இத்துடன் அவர்களுக்கு சுகாதார அடையாள அட்டையும் வழங்கப்படும். அதன் மூலம் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தேவையான மருத்துவ வசதிகளை பெற்றுக் கொள்ளலாம். இந்த திட்டத்திற்காக ஐந்தாண்டுக்கு ரூ.8,000 கோடி நிதியுதவி கோரப்பட்டுள்ளது. இது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும்.

தமிழகத்தில் சுகாதாரப் பணிகளை மேற்கொள்வதற்காக தமிழக சுகாதாரத் துறை ரூ.780 கோடி கேட்டுள்ளது. இது குறித்து வரும் மார்ச் 7-ம் தேதி டெல்லியில் ந ட‌ க்கவுள்ள மத்திய-மாநில அமைச்சர்கள ், அதிகாரிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.

இவ்வாறு அமைச்சர் அன்புமணி தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிமுகவிடம் பாஜக கேட்கும் தொகுதிகள்!.. எடப்பாடி பழனிச்சாமி ஷாக்!...

திமுக தங்கத்தையே கொடுத்தாலும் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்: செல்லூர் ராஜு

இருமுடி கட்டி போவாங்க! விஜய் ரசிகர் செய்த செயலால் கடுப்பான நெட்டிசன்கள்

கொல்கத்தா நிகழ்வின்போது ஏற்பட்ட குழப்பம்.. மெஸ்ஸியிடம் மம்தா பானர்ஜி வருத்தம்!

யூடியூபர் சவுக்கு சங்கர் மீண்டும் கைது: வீட்டின் கதவை உடைத்து கைது செய்ததாக தகவல்..!

Show comments