மூத்த குடிமக்களுக்கான அடுக்குமாடி வீடுகள்

Webdunia
திங்கள், 17 ஆகஸ்ட் 2009 (16:48 IST)
சென்ன ைக்கு அருகே முதல் முறையாக எஸ்டான்ஸியா ஒருங்கிணைந்த நகரில் மூத்த குடிமக்களுக்கான அடுக்குமாடி குடியிருப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இங்கு மூத்த குடிமக்கள் மற்ற குடும்பத்தினருடன் இணைந்து மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கான சூழல் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது.

இளமைக்காலத்தில் சுறுசுறுப்பான வாழ்க்கையை வாழ்ந்து விட்டு, பாதுகாப்பின்றியும், தனிமையிலும் வாழ்க்கை நடத்துவதைத் தவிர்க்கும் வகையில், அன்றாட சவால்களை எதிர்கொண்டு பாதுகாப்பான சுற்றுப்புற சூழலில் வாழ்வதற்கு இந்த குடியிருப்ப ுகள் வகை செய்க ின்றன.

குடியிருப்பு வளாகத்திலேயே பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையும், மருந்துக் கடையும் இருப்பதுடன், மூத்த குடிமக்களின் அன்றாட மருத்துவத் தேவைக்கு அழைத்தவுடன் வரும் டாக்டர் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

அருகிலேயே ஆம்புலன்ஸ் வசதியுடன் 750 படுக்கைகளைக் கொண்ட எஸ்.ஆர்.எம். மருத்துவமனையும் அமைந்திருப்பது கூடுதல் சிறப்பம்சமாகும்.

எல் அண்ட் டி அருண் எக்ஸலோ ரியால்டி பிரைவேட் லிமிடெட்டின் நிர்வாக இயக்குனர் பி. சுரேஷ் குடியிருப்பு குறித்து கூறுகையில், மூத்த குடிமக்களுக்கான நட்புறவுடன் கூடிய அபார்ட்மெண்ட்ஸ் குறிப்பிட்ட எண்ணிக்கையிலேயே இருப்பதாகவும், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு இந்த வீடுகள் ஒரு வரப்பிரசாதமாக அமையும் என்றும் குறிப்பிட்டார்.

வெளிநாடுகளில் வசிப்போர் எண்ணற்ற மைல்களுக்கு அப்பால் வசிக்கும் தங்களின் வயது மூத்த பெற்றோரை மாசற்ற சூழ்நிலையில், பாதுகாப்பாகவும், சிறந்த மருத்துவ வசதிகளுடனும் வைத்துக் கொள்வதற்கு இந்த அடுக்குமாடி குடியிருப்புகள் உதவும் என்றும் அவர் தெரிவித்தார்.

தரை தளம் மற்றும் முதல் மாடி அபார்ட்மெண்ட்கள் மூத்த குடிமக்களுக்காகவே முன்பதிவு செய்யப்படுகிறது.

ஜி.எஸ்.டி சாலையில் மறைமலை நகர் ரயில் நிலையத்திற்கு மிக அருகாமையில் 82 ஏக்கர் பரப்பளவில் வல்லன்சேரியில் இந்த அடுக்கு மாடி குடியிருப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவிடமிருந்து திருடிய சொத்துக்களை ஒப்படைக்க வேண்டும்.. வெனிசுலாவுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை..!

நடு ரோட்டில் கணவருக்கு மாரடைப்பு.. லிப்ட் கேட்டு கதறிய மனைவி.. யாரும் உதவாததால் பலியான உயிர்..!

வாய தொறந்து பேசுங்க!.. கம்முன்னே இருந்தா அரசியல்வாதியா?!.. விஜயை போட்டு பொளந்த அண்ணாமலை!.

60 ஏக்கரில் கார் பார்க்கிங்!.. 24 ஆம்புலன்ஸ்... ஈரோடு தவெக கூட்டத்துக்கு ஏற்பாடுகள்!...

தவெக தலைவர் விஜய் பிரச்சாரம்!.. ஈரோட்டில் பள்ளிக்கு விடுமுறை!...

Show comments