பொட்டு சுரேஷ் கொலை விசாரணை: விசாரணையில் ரஜினி மன்ற நிர்வாகி!

Webdunia
திங்கள், 4 மார்ச் 2013 (14:14 IST)
FILE
மதுரையைச் சேர்ந்த பொட்டு சுரேஷ் கொலை தொடர்பான விசாரணையில் ரஜினி மன்ற நிர்வாகி பால தம்புராஜ் விசாரணை வலையில் சிக்கியுள்ளார். மதுரை மாவட்ட தி.மு.க. செயலாளர் தளபதியிடமும் போலீஸ் விசாரணை நடத்தி வருவதாக ஊடகச்செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த கொலை தொடர்பாக அட்டாக் பாண்டி மீது சந்தேகப்படும் போலீசார் தலைமறைவாக உள்ள அவரை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் பொட்டு சுரேசின் நட்பு வளையத்தில் இருந்த மதுரை மாவட்ட ரஜினி மன்ற பொறுப்பாளர் பாலதம்புராஜ், சினிமா தியேட்டர் அதிபர் கல்யாணி, ரஜினி மன்ற சேகர் உள்ளிட்ட பலரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை மாவட்ட திமுக செயலாளர் தளபதி யை சுப்பிரமணியபுரம் போலீசார் அழைத்து விசாரித்து வருகின்றனர்.

முக்கிய குற்றவாளியாக கருதப்படும் அட்டாக் பாண்டி சரணடைந்தால் மட்டுமே உண்மை கொலையாளிகள் பற்றி போலீசாருக்கு துப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெக தலைவர் விஜய் பிரச்சாரம்!.. ஈரோட்டில் பள்ளிக்கு விடுமுறை!...

கிண்டில் (Kindle) மூலம் அமேசான் கணக்கு ஹேக்: எச்சரிக்கை தரும் நிபுணர்!

பெங்களூருவில் தனியாக வாழும் ஒரு பெண்ணின் மாத செலவு ₹1 லட்சம்! சமூக வலைத்தளத்தில் புலம்பல்..!

லியோனல் மெஸ்ஸி நிகழ்வு குளறுபடி: மேற்கு வங்க அமைச்சர் ராஜினாமா; பலிகடா ஆக்கப்பட்டாரா?

30 ஆண்டுகள் அமெரிக்காவில் வாழ்ந்த இந்திய பெண்: க்ரீன் கார்டு இண்டர்வியூ போது கைது..!

Show comments