Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நகையைத் திருடி வாயில் போட்டு விழுங்கிய நபர்! சென்னை அரசு மருத்துவமனையில் பரபரப்பு!

Webdunia
வெள்ளி, 28 மார்ச் 2014 (09:19 IST)
சென்னை அரசு மருத்துவமனையில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிட்ம நகையைத் திருடிய வாலிபர் அதை வாயில் போட்டு விழுங்கினார். எண்டோஸ்கோபி செய்து பிறகு நகை வெளியே எடுக்கப்பட்டது.

சென்னை செயின்ட் தாமஸ் மவுண்ட் பகுதியைச் சேர்ந்த பெண் தனலட்சுமி. இவரது கணவர் கொண்டையா நெஞ்சு வலி காரணமாக அரசு பொதுமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இரவில் தனலட்சுமி வார்டுக்கு வெளியே உறங்கினார் அப்போது அங்கு வந்த மர்ம ஆசாமி தனலட்சுமி கழுத்தில் கையை வைத்து சங்கிலியை பறிக்க முயன்றார்.
 
சட்டென எழுந்த தனலட்சுமிக்கும் மர்ம ஆசாமிக்கும் போராட்டம் நடந்தது, கடைசியில் அந்த ஆசாமி நகையை அறுத்துக்கொண்டு ஓடினார். இதனையடுத்து தனலட்சும் கூச்சல் போட்டு அனைவரையும் எழுப்பினார். பொதுமக்கள் உடனே மர்ம ஆசாமியை துரத்தினர்.. 

அனைவரும் விரட்டுகிறார்கள் என்பதால் பயந்த அந்த நபர் திருடிய நகையை வாயில் போட்டு விழுங்கினார். ஆனால் மக்கள் அவரைப் பிடித்து அடித்து உதைத்தனர். பிறகு போலீஸிடம் அந்த நபர் ஒப்படைக்கப்பட்டார். அவர் திருவல்லிக்கேணியைச் சேர்ந்த வல்லிக்கண்ணன் என்று தெரியவந்தது. 
 
விசாரணையில் கமலக்கண்ணன் ஒத்துழைக்காததால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட வயிற்றில் எக்ஸ் ரே எடுக்கப்பட்டது. அதில் வயிற்றில் அந்த தங்கச் சங்கிலி இருந்தது தெரியவந்தது.
 
இதனையடுத்து எண்டோஸ்கோபி செய்து வயிற்றிலிருந்து நகை எடுக்கப்பட்டது. கமலக்கண்ணன் ஏற்கனவே பல குற்றங்களை செய்து சிறையில் இருந்து சிறிது நாள் முன்னால்தான் விடுதலையானதாக போலீசார் தெரிவித்தனர்.
 
வடிவேலு பாணியில் நகையைத் திருடி விழுங்கி பிறகு வடிவேலு பாணியிலேயே பொதுமக்களிடம் தர்ம அடி வாங்கிய இந்தச் சம்பவத்தினால் அரசு பொது மருத்துவமனையில் நள்ளிரவு பரபர்ப்பு ஏற்பட்டது

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

Show comments