Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்ட பெண் வழக்கு: குற்றவாளியின் 2 நண்பர்கள் சிக்கினர்

Ilavarasan
புதன், 7 மே 2014 (10:04 IST)
சென்னை போரூர் ஏரியில் துண்டு துண்டாக மீட்கப்பட்ட பெண்ணின் கொலை வழக்கில், குற்றவாளியில் இரண்டு நண்பர்கள் காவல்துறையினரிடம் சிக்கியுள்ளனர்.
 
போரூர் ரெட்டேரியில் கடந்த சனிக்கிழமை இரவு 7 மணிக்கு பெண் சடலம் மிதந்தது. தலை மற்றும் கை, கால் வெட்டப்பட்டு, கோணிப்பையில் மூட்டையாக கட்டி வீசப்பட்டு இருந்தது. இதுபற்றி போரூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். கொலை செய்யப்பட்டு மூட்டையில் கிடந்தவர் கே.கே.நகர்  நெசப்பாக்கத்தை சேர்ந்த ஸ்ரீராம் என்பவர் மனைவி ரேகா என தெரியவந்தது. இதுதொடர்பான விசாரணையில், அவர் முன்பு வேலை பார்த்த இடத்தில் கால்டாக்சி டிரைவரான சாம்சன் ஒருதலைக்காதல் விவகாரத்தில் ரேகாவை நண்பர்கள் உதவியுடன் வெட்டி கொன்றதும் தெரிந்தது. இதையடுத்து சாம்சன்  தலைமறைவானார்.
 
ரேகாவின் கணவர் ஸ்ரீராமிடம் காவல்த்றையினர் நேற்றும் விசாரணை நடத்தினர். அப்போது அவர், ரேகாவை கடந்த 3 மாதத்துக்கு முன் திருமணம் செய்தேன். சாம்சன் மீது மாதவரம் காவல் நிலையத்தில் தனக்கு தொல்லை தருவதாக ரேகா புகார் கூறியுள்ளார். மாதவரம் காவல்துறையினர் சாம்சனை அழைத்து எச்சரித்து அனுப்பினர். திருமணமாகி தற்போது வேலைக்கு செல்லும் ரேகாவை பின்தொடர்ந்து வந்துள்ளார். அப்போது காரில் கடத்தி சென்று அவரை வெட்டிக்கொலை செய்துள்ளார் என்றார்.
 
இந்நிலையில், காவல்துறையினர் கூறுகையில், பிரேத பரிசோதனை அறிக்கையில் கழுத்து, மார்பில் கத்திக்குத்து காயத்தால் ரேகாவுக்கு இறப்பு ஏற்பட்டுள்ளது. 
 
அவர் இறந்ததை அறிந்த சாம்சன் நண்பர்கள் உதவியுடன் அவரை துண்டு துண்டாக வெட்டி கோணிப்பையில்  மூட்டையாக கட்டி போரூர் ஏரியில் வீசியுள்ளார். நாங்கள் தேடுவதை அறிந்து தலைமறைவாக உள்ளார். ஆனாலும், சாம்சனுடன் வேலை பார்க்கும் கால்டாக்சி டிரைவர்கள் 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறோம். அவர்கள் சாம்சன் இருப்பிடம் குறித்து தகவல் தெரிவித்துள்ளனர். எனவே, சாம்சனை விரைவில் கைது செய்துவிடுவோம் எனறனர்.

காதல் தோல்வி.. 16 வயது சிறுமி, 14 வயது சிறுவன் தற்கொலை.. சென்னை கடலில் நடந்த பரிதாபம்..!

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு: மேலும் ஒருவர் கைது

போக்குவரத்து - காவல்துறை மோதல்.. முதல்வருக்கு பறந்த கடிதம்..!

பத்திரகாளியம்மன் கோவிலின் வைகாசி திருவிழாவை முன்னிட்டு - ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக் கடன்!

குப்பைகள் கொட்டும் கூடராமாக மாற்றி வரும் நகராட்சி நிர்வாகம் குப்பை கொட்டுவதற்காக வந்த நகராட்சி வண்டியின் வீடியோ வெளியாகி பரபரப்பு!

Show comments